சென்னை: தீபாவளி திருநாளை முன்னிட்டு, காலை 6 மணி முதல் 7 மணி வரையும் மற்றும் மாலை 7 மணி முதல் 8 மணி வரையும் என மொத்தம் 2 மணி நேரம் மட்டும் பட்டாசுகள் வெடிக்கலாம் என உச்ச நீதிமன்றம் வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளது. இதை அனைவரும் பின்பற்ற வேண்டும் என தமிழ்நாடு அரசு சார்பிலும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் சென்னை காவல் ஆணையர் உத்தரவின் அடிப்படையில், அனுமதிக்கப்பட்ட நேரத்தைக் கடந்து பட்டாசுகள் வெடித்தது தொடர்பாக 271 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக கடந்த 23 ஆம் தேதி முதல் 25 ஆம் தேதி வரை அனுமதிக்கப்பட்ட நேரத்தை கடந்து பட்டாசுகள் வெடித்தது தொடர்பாக இந்த வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
மேலும் அரசின் விதிகளை மீறி பட்டாசுக் கடை நடத்தியது தொடர்பாக 14 வழக்குகளும், அளவுக்கு அதிகமான சத்தத்துடன் பட்டாசுகள் வெடித்ததற்காக 69 வழக்குகளும் என மொத்தம் 354 வழக்குகள் சென்னை காவல்துறை சார்பில் பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ஒரே நாளில் 31 சிகரெட் புகைத்த சென்னை வாசிகள்..! எத்தனை பேர் உயிரிழந்தார்கள்..?