ETV Bharat / state

ஆருத்ரா நிறுவண மோசடி குறித்து 50 பக்க குற்றப்பத்திரிக்கை தாக்கல்! - ஆருத்ரா மோசடி செய்திகள்

ஆருத்ரா நிதி நிறுவனம் மோசடி வழக்கில், பொருளாதார குற்ற பிரிவு காவல்துறையினர்,அரசு கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் டி.பாபு 50 பக்க குற்றப்பத்திரிக்கையை சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளனர்.

Aarudhra Scam
ஆருத்ரா மோசடி
author img

By

Published : Jun 20, 2023, 11:06 PM IST

சென்னை: அமைந்தகரை அடுத்த மேத்தா நகரில் தலைமை இடத்தை கொண்டு செயல்பட்டு வந்தது ஆருத்ரா கோல்டு டிரேடிங் பிரைவேட் லிமிடெட் எனும் தனியார் நிறுவனம். இந்நிறுவனம் தங்களிடம் 1 லட்சம் ரூபாய் டெபாசிட் செய்தால், மாதம் தொரும் 36,000 ரூபாய் வட்டி பணமாக தறப்படும் என்று தமிழகம் முழுவதும் விளம்பரம்செய்த்து

மேலும், தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் இதன் கிழை அலுவலகம் செயல்பட்டு வந்தது. இந்த நிறுவணம், சுமார் 1 லட்சம் முதலீட்டாளர்களிடம் சுமார் 2,438 கோடி ரூபாய் வசூலித்து மோசடி செய்தது. இதுகுறித்து பொருளாதார குற்றத் தடுப்புப் பிரிவு காவல்துறையிடம் புகார் அளிக்கப்பட்டது.

இதனிடையே அந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர்களாக இருந்து வந்த ராஜசேகர், உஷா ராஜசேகர், மைக்கேல் ராஜ் ஆகியோர் வெளிநாட்டில் தலைமறைவு ஆகிவிடனர். இதுதொடர்பாக 40 பேர் மீது பொருளாதார குற்றத் தடுப்புப் பிரிவு வழக்குப்பதிவு செய்தது.

இந்த வழக்கில் பாஸ்கர், மோகன்பாபு, செந்தில்குமார், நாகராஜன், பேச்சிமுத்துராஜா, நடிகர் ரூசோ ஆகியோர் பொருளாதார குற்ற பிரிவு காவல்துறையினரால் கைதுசெய்யப்பட்டனர். பின் அவர்களிடம் நடத்திய விசாரணையின் போது, இந்த மோசடியில் திரைப்பட நடிகர், தயாரிப்பாளர் மற்றும் தமிழக பா.ஜ.கவின் ஓ.பி.சி. பிரிவு துணை தலைவராக இருக்கும் ஆர்.கே.சுரேசுக்கும், பா.ஜ.கவின் நிர்வாகி ஹரீஷ் ஆகியோருக்கும் தொடர்பிருந்த்து கண்டுபிடிக்கப்பட்டது.

இதைனையடுத்து, கிட்டதட்ட 61 இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் 6 கோடியே 35 லட்சம் ரொக்கப் பணம், 1 கோடியே 13 லட்சம் மதிப்புள்ள தங்க நகைகள், வெள்ளி பொருட்கள், 22 கார்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் வங்கிக் கணக்கில் இருந்த 96 கோடி ரூபாய், 103 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகள் ஆகியவை முடக்கப்பட்டுள்ளன.

இந்த வழக்கில் டான்பிட் நீதிமன்றம் எனப்படும் தமிழ்நாட்டு முதலீட்டார்கள் பாதுகாப்பு சிறப்பு நீதிமன்றத்தில், பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறை தரப்பில், அரசு கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் டி.பாபு குற்றப்பத்திரிக்கை ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.

வழக்கறிஞர் டி.பாபு தாக்கல் செய்த 50 பக்க அளவிலான குற்றப்பத்திரிக்கையில், முதற்கட்டமாக 360 புகார்களில் தொடர்புடைய 17 கோடியே 50 லட்சம் ரூபாய் மோசடி குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த வழகிற்கு தொடர்புடைய 3,000 பக்கம் அளவிலான கூடுதல் ஆவணங்களை ஒரு நாட்களில் தாக்கல் செய்யப்படும் என கூறப்படுகிறது.

இவற்றை நீதிபதி ஏற்றுக்கொள்ளும் பட்சத்தில், சம்பந்தப்பட்ட குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு சம்மன் அனுப்பி, இவற்றின் நகலையும் அவர்களுக்கு வழங்குவார்.

மேலும் மாவட்ட வருவாய் அதிகாரியிடம் நிலுவையில் உள்ள 1 லட்சத்து 9 ஆயிரத்து 255 புகார்கள் குறித்த விசாரணை நடத்திய பிறகு கூடுதல் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படும் என்றும் காவல்துறை தரப்பில் கூறப்பட்டது.

இதையும் படிங்க: Hijavu Scam: ஹிஜாவு மோசடியில் தம்பதி கைது: ரூ.500 கோடி சுருட்டியது அம்பலம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.