ETV Bharat / state

Odisha Train Accident: விபத்தில் சிக்கிய தமிழர்கள் நிலை குறித்து ஆ.ராசா விளக்கம் - எம்பி ஆ ராசா

ஒடிசா ரயில் விபத்தில் சிக்கிய தமிழர்களின் நிலை குறித்து நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா விளக்கம் அளித்துள்ளார்.

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Jun 3, 2023, 11:14 PM IST

ஒடிசா ரயில் விபத்தில் பாதிக்கப்பட்ட தமிழர்களின் நிலை குறித்து ஆ.ராசா விளக்கம்

சென்னை: ஒடிசா மாநிலம் பாலசோரில் நடப்பு நூற்றாண்டின் மிக மோசமான ரயில் விபத்து எனக் கூறப்படும் கோரமண்டல் உள்ளிட்ட மூன்று ரயில்கள் விபத்துக்குள்ளான சம்பவம் நாட்டையே உலுக்கியது. இந்த விபத்தில் சிக்கி 290 க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்த நிலையில், 700 க்கும் அதிகமான மக்கள் படுகாயங்களுடன் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.

விபத்தின் மீட்பு பணிகள் முடிவடைந்த நிலையில் தற்போது மறுசீரமைப்பு பணிகள் நடந்து வருகிறது. மேலும் விபத்தில் பாதிக்கப்பட்ட தமிழர்களை மீட்கும் பணியில் தமிழகத்தை சேர்ந்த அமைச்சர்கள், ஐஏஎஸ் அதிகாரிகள் அடங்கிய குழுவினர் ஈடுபட்டு உள்ளனர்.

இந்த விபத்துக்கான காரணம் என்ன என்பது இதுவரை கண்டறியப்படாதது பெரும் குழப்பத்தையும், சந்தேகத்தையும் ஏற்படுத்தி உள்ளது. இந்த விபத்து தனி மனித தவறால் ஏற்பட்டதா? அல்லது தொழில்நுட்பக் கோளாறு காரணமா? என்ற பெரும் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. சிக்னல் அமைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாக இந்த விபத்து ஏற்பட்டு இருக்கலாம் எனவும் கூறப்படுகிறது. இருப்பினும் விபத்துக்கான காரணம் குறித்து ரயில்வே அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில் அண்ணா அறிவாலயத்தில் ரயில் விபத்து குறித்து செய்தியாளர்களை சந்தித்த நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா, “ரயில் விபத்தில் 290க்கும் மேற்பட்டோர் இறந்திருப்பது அதிர்ச்சி அடைய செய்துள்ளது. இந்த விபத்துக்கு பிறகு மத்திய அரசு ஸ்தம்பித்து உள்ளது. தமிழ்நாடு அரசு சார்பில் அனைத்து விதமான உதவிகளும் தயாராக இருக்கிறது என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்து உள்ளார்.

இதையும் படிங்க: Odisha Train Accident: ரயில் விபத்தில் தமிழர்கள் உயிரிழப்பு? மீட்புக் குழு என்ன கூறியது?

தமிழகத்தில் இருந்து ஒரு குழு நேரடியாக சென்று மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அதேபோன்று, காயம் அடைந்தவர்களை சென்னைக்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் அங்கு தங்குவதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. கூடுதல் மருத்துவ தேவைகள் இருந்தால் அதற்கும் தமிழகம் சார்பில் மருத்துவ வசதிகள் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

கட்டுப்பாட்டு அறை மற்றும் உதவி எண்கள் போன்றவற்றை அமைத்து நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. மேலும் அங்கு என்ன உதவிகள் வேடுமானாலும் உடனே செய்வதற்கு முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். பயணம் செய்தவர்களின் பட்டியலை எடுத்து அதில் உள்ள பயணிகளின் பெயர்களில் எவை எல்லாம் தமிழ் பெயர் அல்லது தமிழ்நாட்டை செர்ந்தவற்களாக இருக்கக்கூடும் என்று யூகிக்ககூடியவர்களின் தொலைபேசி எண்களை எடுத்து அவர்களை தொடர்புகொள்ள முயற்சிது வருகின்றனர்.

அதில் சிலர் அழைப்பை ஏற்று பேசினர் அவர்களை அழைத்து வந்விட்டோம். சிலர் அழைப்பை ஏற்கவில்லை. அவர்களின் தொலைபேசி தவறி இருக்கக்கலாம் அல்லது வேறு காரணங்களால் கூட அழைப்பை ஏற்க முடியாமல் இருந்திருக்கலாம். அவர்கள் அழைப்பை ஏற்காதது தான் பயமாக உள்ளது” என தெரிவித்து உள்ளார்.

இதையும் படிங்க: Coromandel Express : மூன்று ரயில்கள் விபத்துக்கு இதுதான் காரணமா? விசாரணை அறிக்கை தாக்கல்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.