ETV Bharat / state

வங்கக்கடலில் வலுப்பெற்றது 'மிதிலி' புயல்: மீனவர்களுக்கு எச்சரிக்கை! - Coastal areas of West Bengal

Cyclone Midhili: மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், 'மிதிலி' புயலாக வலுப்பெற்று இருப்பதாகவும், இன்று இரவு வங்கதேச கடற்கரையை கடக்கக் கூடும் எனவும் தென் மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

a deep depression over the bay of bengal strengthened into cyclone midhili
வங்கக்கடல் பகுதிகளில் ஏற்பட்ட ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மிதிலி புயலாக வலுப்பெற்றது
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 17, 2023, 3:53 PM IST

சென்னை: மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ‘மிதிலி’ புயலாக வலுப்பெற்று உள்ளது. இது இன்று (நவ.17) இரவு வங்கதேச கடற்கரையை கேப்புபாராவிற்கு அருகில் கடக்கக்கூடும். அச்சமயத்தில் காற்றின் வேகம் மணிக்கு 60 முதல் 70 கி.மீ வேகத்திலும், இடையிடையே 80 கி.மீ வேகத்திலும் வீசக்கூடும் என தென் மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து தென் மண்டல வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், “மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், வடக்கு - வடகிழக்கு திசையில் நகர்ந்து இன்று (நவ.17) காலை 5.30 மணி அளவில், வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ‘மிதிலி’ புயலாக வலுப்பெற்றது.

தொடர்ந்து, காலை 8.30 மணி அளவில் வடமேற்கு மற்றும் அதனை ஒட்டிய வடகிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் பரதீப்பிலிருந்து (ஒரிசா) சுமார் 250 கி.மீ கிழக்கு - வடகிழக்கே, டிகாவில் இருந்து (மேற்கு வங்கம்) சுமார் 180 கி.மீ கிழக்கு - தென்கிழக்கே, கேப்புபாராவில் இருந்து (வங்கதேசம்) சுமார் 180 கி. மீ தென்மேற்கே நிலை கொண்டுள்ளது.

இது வடக்கு - வடகிழக்கு திசையில் நகர்ந்து இன்று இரவு வங்கதேச கடற்கரையை கேப்புபாராவிற்கு அருகில் கடக்கக்கூடும். அச்சமயத்தில் காற்றின் வேகம் மணிக்கு 60 முதல் 70 கிலோ மீட்டர் வேகத்திலும், இடையிடையே 80 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

மீனவர்களுக்கான எச்சரிக்கை: வடக்கு வங்கக்கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய வங்கதேச கடலோரப்பகுதிகள்: இன்று சூறாவளிக்காற்று மணிக்கு 65 முதல் 75 கிலோ மீட்டர் வேகத்திலும், இடையிடையே 85 கி.மீ வேகத்திலும், மாலை முதல் காற்றின் வேகம் படிப்படியாக உயர்ந்து மணிக்கு 70 முதல் 80 கி.மீ வேகத்திலும், இடையிடையே 90 கி.மீ வேகத்திலும், அதன் பிறகு படிப்படியாக குறைந்து மாலை முதல் இரவு வரை மணிக்கு 60 முதல் 70 கி.மீ வேகத்திலும், இடையிடையே 80 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

இதேப்போல், நாளை (நவ.18) காலை வரை சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கி.மீ வேகத்திலும், இடையிடையே 60 கி.மீ வேகத்திலும் வீசக்கூடும். அதன் பிறகு காற்றின் வேகம் படிப்படியாக குறையக்கூடும்

மேற்குவங்க கடலோரப்பகுதிகள்: இன்று நள்ளிரவு வரை சூறாவளிக்காற்று மணிக்கு 50 முதல் 60 கி.மீ வேகத்திலும், இடையிடையே 70 கி.மீ வேகத்திலும் வீசக்கூடும். அதன் பிறகு, காற்றின் வேகம் படிப்படியாக குறையக்கூடும். மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம்” என தென் மண்டல வானிலை ஆய்வு மையம் சார்பில் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

இதையும் படிங்க: செந்தில்பாலாஜி உடல்நிலை குறித்த அறிக்கை இன்று மாலை வெளியிடப்படும் - அமைச்சர் மா.சுப்பிரமணியன்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.