ETV Bharat / state

7 வயதில் டாக்டர் பட்டம் பெற்ற சிறுவன் - 8 வயதில் டாக்டர் பட்டம் பெற்ற சிறுவன்

உலகமே கண்டு பயந்த கொடூர நோய் கரோனா. பொருளாதார இழப்பு என்பது சாமானியர் முதல் சர்க்கார் வரை பாதித்தது. 2020ஆம் ஆண்டு கரோனா தொற்றால் மக்கள் ஏழ்மை நிலைக்குத் தள்ளப்பட்டு, என்ன செய்வது என்று அறியாமல் இருந்தனர். இப்படி இருந்த சூழ்நிலையில் கரோனா காலத்தில் பயிற்சி மேற்கொண்டு, தற்போது சாதனையாளராக விளங்கி வரும் எட்டு வயது சிறுவன் குறித்து இந்த சிறப்பு செய்தித்தொகுப்பில் காணலாம்.

Etv Bharat 8 வயதில் டாக்டர் பட்டம் பெற்ற சிறுவன்

author img

By

Published : Aug 25, 2022, 10:06 PM IST

சென்னையைச் சேர்ந்த டாக்டர் இமானுவேல் (8). தன்னுடைய ஏழாவது வயதில் டாக்டர் பட்டம் பெற்று அசத்தியுள்ளார். இவரது பெற்றோர் தந்தை யுகேந்திர குமார், தாயார் சங்கீதா மேரி. இவருடைய பெற்றோர், கடந்த 2020ஆம் ஆண்டு கரோனா பெருந்தொற்று ஊரடங்கு காலத்தில் தனது மகனின் நேரத்தைப் பயனுள்ளதாக மாற்ற எண்ணி, யூ-ட்யூப் ஒன்றைத்தொடங்கினர்.

மேலும் தனது மகன் செய்யும் செயல்களைத் தொடர்ச்சியாக காணொலியில் பதிவேற்றி உள்ளனர். கலைகள், திருவிவிலியம் தொடர்பானவை, அறிவுசார் காணொலிகள், மாய வித்தைகள், தற்காப்புக் கலைகள், உடல் ஆரோக்கியம் உள்ளிட்டவை குறித்து தனது மகனுக்கு சொல்லிக் கொடுத்தனர்.

109 ஆத்திச்சூடியை, தமிழில் ஒரு நிமிடம் 32 விநாடிகளில் மனப்பாடமாக ஒப்புவித்து, கலாமின் உலக சாதனை புத்தகத்தில் டிசம்பர் 2020ஆண்டு அங்கீகரிக்கப்பட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது. 150 கூட்டல் மற்றும் கழித்தல் கணக்குகளின் விடைகளை அபாகஸ் வழிமுறையில், நான்கு நிமிடங்கள் 43 விநாடிகளில் கண்டுபிடித்து ஆல் இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸில் உலக சாதனைப்புத்தகத்தில் இடம்பிடித்தார். 25 பல்வேறு விதமான சாதனைகளை சிறுவன் இமானுவேல் மேற்கொண்டதன் விளைவாக, இந்த சிறுவனுக்கு கடந்த ஆண்டு யுனிவர்சல் தமிழ்ப்பல்கலைக்கழகம் கௌரவ டாக்டர் பட்டம் வழங்கி கௌரவித்து உள்ளது.

தன்னுடைய மகனை கட்டாயப்படுத்தி இதைச்செய்ய வேண்டும் என்று எதையும் தாங்கள் திணிக்கவில்லை என இமானுவேலின் தாயார் சங்கீதா மேரி ''ஈடிவி பாரத் தமிழ்நாடு ஊடகத்திற்கு'' அளித்த சிறப்புப்பேட்டியில் கூறியுள்ளார்.

அப்போது பேசியவர், “எனது மகன் இதுவரை 25 உலக சாதனைகளைப் படைத்த காரணத்தால் முதலமைச்சர் ஸ்டாலின் எங்களை அழைத்து வாழ்த்து தெரிவித்தார். 10 கிலோமீட்டர் தூரத்தை ஒன்றரை மணி நேரத்தில் ஓடி கின்னஸ் சாதனைப்புத்தகத்தில் இடம்பெற்றுள்ளான்.

சிறுவனின் தாயார்

கரோனா காலகட்டத்தில் என்ன செய்வது என்று தெரியாத நேரத்தில், எனது மகன் யூ-ட்யூப் சேனல் ஆரம்பித்து, தினந்தோறும் வீடியோ போட்டு, அதோடைய விளைவு தான் தற்போது எனது மகன் சாதனையாளராகத் திகழ்கிறான். மேலும் எனது மகன் எதைச் செய்ய விரும்பினாலும் அதை செய்ய நாங்கள் ஒத்துழைத்து பயிற்சி வழங்கினோம். என்னுடைய மகனை கட்டாயப்படுத்தி இதை செய்ய வேண்டும் என்று எதையும் நாங்கள் திணிக்கவில்லை. இதனாலேயே அவன் தன்னுடைய திறமைகளை அறிந்து கொள்ள முடிந்தது” எனத் தெரிவித்தார்.

தமிழ்நாடு அரசின் ஆதரவோடு இன்னும் பல்வேறு சாதனைகள் செய்து தமிழ்நாட்டிற்குப் பெருமை சேர்ப்போம் என நம்பிக்கை தெரிவித்தார். மேலும், நேரம் என்பது ஒரு பொக்கிஷம் மாதிரி, நேரத்தை வீணடிக்காமல் தொடர் முயற்சி ஈடுபட்டால் அதற்கான பலன் கண்டிப்பாக கிடைக்கும் என தெரிவித்தார்.

பத்து வயதுக்குள் உங்களுடைய குழந்தைகளின் துறை சார்ந்த ஆர்வத்தை கண்டுபிடித்து விட்டீர்கள் என்றால் அக்குழந்தை எதிர்காலத்தில் துறை சார்ந்த வல்லுனராக வாய்ப்பு அதிகம் உள்ளது என சிறுவனின் தந்தை யுகேந்திர குமார் ஈடிவி பாரத் ஊடகத்திற்கு அளித்த சிறப்புப்பேட்டியில் தெரிவித்துள்ளார்.

அப்போது பேசியவர், “எனது மகனின் பன்முகத்தன்மையை என்னுடைய மனைவி தான் கண்டறிந்து அவனுக்கு கற்றுக் கொடுத்தார். மேலும் எனது குடும்பமும் சேர்ந்து என்னுடைய மகனுக்கு உத்வேகம் அளித்ததால், தற்போது இந்த சாதனையை அடைந்துள்ளான்.

கரோனா காலத்தில் முதல் தடவை ஒரு கிலோமீட்டர் தூரத்துக்கு ஓடினான். அதுவே தற்போது ஓட்டப்பந்தயத்தில் சாதிக்க உந்து சக்தியாக உள்ளது. மேலும் இந்திய அளவில் 10 கிலோ மீட்டர் ஓடி எனது மகன் கின்னஸ் சாதனைப் பெற்றுள்ளான்.
பெற்றோருக்கு நான் வைக்கக் கூடிய தாழ்மையான வேண்டுகோள், உங்களுடைய குழந்தைகள் எதை விரும்புகிறார்களோ அதை செய்ய விடுங்கள். நீங்கள் இழந்ததை, குழந்தைகள் மீது திணிக்காதீர்கள்.

படிப்பு என்பது இயல்பாகவே குழந்தைகள் படித்துவிடும். படிப்பைத் தவிர குழந்தைகளிடம் உள்ள விருப்பம் என்னவாக உள்ளது என்பதை கண்டறிந்து அதற்கானப் பயிற்சி ஆலோசனைகளை வழங்கினால், அவர்கள் தேர்ந்தெடுக்கும் துறைகளில் அவர்கள் கண்டிப்பாக சாதனையாளர்களாக விளங்குவார்கள். உங்களுடைய குழந்தைகள் செய்யும் செயல்களை பிறர் விமர்சித்தால் கண்டு கொள்ளாதீர்கள்.

பத்து வயதுக்குள் உங்களுடைய குழந்தைகளின் துறை சார்ந்த ஆர்வத்தைக்கண்டுபிடித்துவிட்டீர்கள் என்றால் அக்குழந்தை எதிர்காலத்தில் துறை சார்ந்த வல்லுநராக வாய்ப்பு அதிகம் உள்ளது. குழந்தைகளுக்கு ஆரோக்கியமான உணவுகள் வழங்கி ஆரோக்கியமாக வைத்திருங்கள். உடற்பயிற்சி உள்ளிட்ட அனைத்துத்துறை சார்ந்தவற்றை குழந்தைகளுக்கு தெரியப்படுத்துங்கள்” எனத் தெரிவித்தார்.

7 வயதில் டாக்டர் பட்டம் பெற்ற சிறுவன்

கௌரவ விருதுகளும், பாராட்டுகளும்

  • டான் போஸ்கோ பள்ளி, எழும்பூர் வழங்கிய தமிழ் ஞானச்செல்வன் விருது
  • செ.வே. சாதனையாளர்கள் குழுமத்தின் சார்பாக தமிழ்நாட்டின் பெருமை விருது (Pride of Tamilnadu)
  • சர்வதேச தமிழ்ப் பல்கலைக்கழகம் கௌரவித்து வழங்கிய கௌரவ டாக்டரேட் பட்டம் (Honourary Doctorate - Honoris Causa)
  • Iqra Foundation International Campaign for Peace பெருமையுடன் வழங்கிய அகில உலக அமைதியின் தூதர் (Global Peace Ambassador)
  • DR.Y.S. இம்மானுவேல் டாரியை கௌரவிக்கும் விதமாக அருட்பணி ஜெரால்ட் மிராண்ட், SDB , Principal Don Bosco School , Egmore, மற்றும் திரு . P.K. இளமாறன் , மாநிலத்தலைவர் , Tamilnadu Teachers Association முன்னிலையில் தபால் தலை டான் போஸ்கோ பள்ளியில் வெளியிடப்பட்டது.
  • ஆசிய புக் ஆஃப் ரிக்கார்ட்ஸ் கிரேன்ட் மாஸ்டர் ( Grand Master ) என்கிற பட்டத்தை வழங்கி கௌரவித்து உள்ளது.
  • குறுகிய காலத்தில் அதிக உலக சாதனைப்படைத்தவர் என்கிற சாதனையை அங்கீகரித்து பினிக்ஸ் இன்டர்நேஷனல் உலக சாதனைப் புத்தகம் டாக்டர் APJ அப்துல் கலாம் இன்டர்நேஷனல் விருது வழங்கியுள்ளது.
  • இந்தியாவின் சிறந்த மாணவர் விருது.
  • ஆங்கில எழுத்துகளை பின்னிலிருந்து முன்பாக (தலைகீழாக) மிகக் குறைந்த நேரத்தில் 1 நொடி 63 குறுவிநாடியில் சொல்லிய இளம்பிள்ளை என்கின்ற சாதனையைப் படைத்துள்ளார். இச்சாதனையை ஃபியூச்சர் கலாம் சாதனைப் புத்தகம் அங்கீகரித்து விருது மற்றும் சான்றிதழ் வழங்கினர்.
  • குழு சாதனையின் கீழ் உலகின் நீளமான கோவிட் 19 விழிப்புணர்வு காணொலிக்காக இந்திய சாதனைப்புத்தகம், சான்றிதழ் வழங்கியது.
  • ஜெட்லி சாதனைப்புத்தகம் இந்திய சூப்பர் குழந்தை என்ற தலைப்பை வழங்கியுள்ளது.
  • 1 நிமிடம் 55 நொடியில் முன்னோக்கி குட்டிகாரணம் ( Froat Roll ) செய்து உலக சாதனைப் படைத்துள்ளார்.
  • 150 கூட்டல் மற்றும் கழித்தல் கணக்குகளின் விடைகளை அபாகஸ் வழிமுறையில் 4 நிமிடங்கள் 43 விநாடிகளில் கண்டுபிடித்து செவே புக் ஆப் ரிக்கார்ட்ஸின் உலக சாதனைப் புத்தகத்தில் இடம் பிடித்தார்.

தற்காப்பு கருவியான நன்சாக்கு கருவியை ஒரு முனையில் இருந்து மனுமுனை வரை சுழற்றி பிடிக்கும் நுட்பமான முறையை 3 நிமிடங்கள் 17 நொடிகளில் 172 முறை சுழற்றி பிடித்து, சிறப்பான சாதனையை செய்ததின் மூலம் இந்திய சூப்பர் கிட் என்ற வாழ்த்துகளோடு, ஜெட்லி புக் ஆப் ரிக்கார்ட்ஸின் உலக சாதனைப் புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார்.

இதையும் படிங்க: தக்காளி காய்ச்சலை தடுக்க நடவடிக்கை எடுத்திடுக... மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்...

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.