ETV Bharat / state

கரோனா போரில் வென்ற 96 வயது மூதாட்டி! - Omanthurar Medical College Hospital

சென்னை: அரசு ஓமந்தூரார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கரோனா வைரஸ் நோய்த்தொற்றினால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப்பெற்று வந்த 96 வயது மூதாட்டி பூரண குணமடைந்து வீடு திரும்பினார்.

கரோனா போரில் வென்ற 96 வயது மூதாட்டி!
கரோனா போரில் வென்ற 96 வயது மூதாட்டி!
author img

By

Published : Nov 2, 2020, 8:33 PM IST

Updated : Nov 2, 2020, 8:50 PM IST

சென்னை அரசு ஓமந்தூரார் மருத்துவக் கல்லூரி கல்லூரி மருத்துவமனையில் கரோனா நோயாளிகளுக்கு மார்ச் மாதம் 27ஆம் தேதி முதல் சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. இந்த மருத்துவமனையில் இதுவரை 23 ஆயிரத்து 37 பேர் கரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டு உள்நோயாளிகளாகச் சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்களில் 21 ஆயிரத்து 392 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

மேலும் இந்த மருத்துவமனையில் 90 வயதிற்கு மேற்பட்ட கரோனா நோயாளிகள் 31 பேர் அனுமதிக்கப்பட்டு அவர்களில் 27 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். இவர்களில் 95 வயதிற்கு மேற்பட்டவர்கள் 15 பேர் அவர். நுரையீரல் நோய்த்தொற்றினால் 5 விழுக்காடு முதல் 50 விழுக்காடு வரை பாதிக்கப்பட்டவர்களும் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இந்நிலையில், சென்னையைச் சேர்ந்த திரிபுரசுந்தரி என்ற 96 வயது மதிக்கத்தக்க மூதாட்டி கடந்த வாரம் கரோனா நோய்த்தொற்று ஏற்பட்டு உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டார். பத்து நாட்கள் சிகிச்சைக்குப் பின்னர் பூரண குணமடைந்த அவர் இன்று வீடு திரும்பினார்.

குறைந்தபட்சம் 17 வயது முதல் அதிகப்பட்சமாக 70% நுரையீரல் பாதிப்புடன் வந்த இளைஞர் உள்பட 98 வயது முதியவர் வரை இந்த மருத்துவமனையில் சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளனர். மேலும் குணம் அடைந்தவர்கள் அனைவரும் கரோனாவிற்கு பிந்தைய தொடர் கண்காணிப்பில் இருந்து வருகின்றனர்.

Last Updated : Nov 2, 2020, 8:50 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.