கரோனா வைரஸால் இதுவரை தமிழகத்தில் 571 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கிடையில் மக்கள் நல்வாழ்வுத் துறை வெளியிட்டுள்ள கண்காணிப்பு குறித்த தகவலில், தமிழ்நாட்டில் 2 லட்சத்து 10 ஆயிரத்து 538 பயணிகள் விமான நிலையங்களில் வெப்ப பரிசோதனை செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் 90ஆயிரத்து 541 பயணிகள் வீட்டில் 28 நாள்களுக்கு மக்கள் நல்வாழ்வுத் துறையின் தொடர் கண்காணிப்பில் இருக்க வேண்டும். அவர்களில் 28 நாள்கள் தொடர் கண்காணிப்பினை 10,814 பேர் முடித்துள்ளனர்.
தற்போது 90 ஆயிரத்து 824 பயணிகள் 28 நாள்கள் வீட்டு கண்காணிப்பில் உள்ளனர். மேலும் தொற்று அதிக அளவில் பரவியுள்ள நாடுகளிலிருந்து வந்த 127 பயணிகள் விமான நிலையங்களின் அருகில் அமைக்கப்பட்டுள்ள மருத்துவமனைகளில் தனிமைப் படுத்தப்பட்டு அரசு கண்காணிப்பில் உள்ளனர். மேலும் மருத்துவமனையில் தனி வார்டில் ஆயிரத்து 848 பயணிகள் தொடர் கண்காணிப்பில் இருந்து வருன்றனர். 4 ஆயிரத்து 612 பயணிகளின் ரத்த மாதிரிகள் பெறப்பட்டதில், 571 பேருக்கு நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
3 ஆயிரத்J 702 பேருக்கு நோய்த் தொற்று இல்லை என்பது உறுதியாகி உள்ளது. 339 நபர்களின் இரத்தம், சளி ஆகியவை ஆய்வகங்களில் பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. மேலும் இன்று ஒரே நாளில் 86 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 8 நோயாளிகள் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். டெல்லியில் நடைபெற்ற இஸ்லாமிய மத கருத்தரங்கில் ஆயிரத்து 246 பேர் கலந்து கொண்டுள்ளனர். அவர்கள் அனைவருக்கும் ரத்தப்பரிசோதனை மாதிரிகள் எடுக்கப்பட்டு உள்ளது. டெல்லி இஸ்லாமிய மத கருத்தரங்கில் கலந்துகொண்டவர்களில் நேற்று வரை 437 பேருக்கும், இன்று 85 பேருக்கும் என 522 பேருக்கு நோய்த் தொற்று உறுதியாகியுள்ளது.
மேலும் தீவிர செயற்கை சுவாசம் அளிப்பதற்கான வென்டிலேட்டர்கள் 3 ஆயிரத்து 371, 22 ஆயிரத்து 49 படுக்கைகளுடன் கூடிய தனி வார்டுகளும் தயார் நிலையில் உள்ளன. டெல்லி இஸ்லாமிய மத கருத்தரங்கில் கலந்துகொண்டவர்களில் இன்று நடத்தப்பட்ட பரிசோதனை முடிவில் சென்னை மாவட்டத்தில் 6 பேரும், செங்கல்பட்டு மாவட்டத்தில் 3 பேரும், திருவள்ளூர் மாவட்டத்தில் ஒருவரும் ,கோயம்புத்தூர் மாவட்டத்தில் 29 பேரும், கடலூர் மாவட்டத்தில் 7 பேரும் ,காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஒருவரும் , மதுரை மாவட்டத்தில் இரண்டு பேரும், நீலகிரி மாவட்டத்தில் 4 பேரும், ராணிப்பேட்டை மாவட்டத்தில் இரண்டு பேரும் ,சேலம் மாவட்டத்தில் மூன்று பேரும், திருவண்ணாமலை மாவட்டத்தில் இரண்டு பேரும், திருநெல்வேலி மாவட்டத்தில் ஒருவரும், வேலூர் மாவட்டத்தில் இரண்டு பேரும், விழுப்புரம் மாவட்டத்தில் இரண்டு பேரும், திண்டுக்கல் மாவட்டத்தில் இரண்டு பேரும், நாகப்பட்டினம் மாவட்டத்தில் ஆறு பேரும், தஞ்சாவூர் மாவட்டத்தில் நான்கு பேரும், தேனி மாவட்டத்தில் ஒருவரும் என 85 பேருக்கு நோய்த் தொற்று உறுதியாகியுள்ளது .
கரோனா தொற்று உறுதியாகியுள்ள 32 மாவட்டங்களின் நிலவரம்,
- சென்னை 95
- கோயம்புத்தூர் 58
- திண்டுக்கல் 45
- திருநெல்வேலி 38
- ஈரோடு 32
- நாமக்கல் 25
- ராணிப்பேட்டை 25
- தேனி 23
- கரூர் 23
- செங்கல்பட்டு 22
- மதுரை 19
- திருச்சிராப்பள்ளி 17
- விழுப்புரம் 15
- திருவாரூர் 12
- சேலம் 12
- திருவள்ளூர் 12
- விருதுநகர் 11
- தூத்துக்குடி 11
- நாகப்பட்டினம் 11
- திருப்பத்தூர் 10
- கடலூர் 10
- திருவண்ணாமலை 8
- கன்னியாகுமரி 6
- சிவகங்கை 5
- வேலூர் 5
- தஞ்சாவூர் 5
- காஞ்சிபுரம் 4
- நீலகிரி 4
- திருப்பூர் 3
- ராமநாதபுரம் 2
- கள்ளக்குறிச்சி 2
- பெரம்பலூர் 1