ETV Bharat / state

யார் பெரிய ரவுடி: டபுள் ரஞ்சித் கொலையில் 8 பேர் கைது - யார் பெரிய ரவுடி

சென்னை வில்லிவாக்கத்தில் பிரபல ரவுடி டபுள் ரஞ்சித் கொலை வழக்கில் 8 பேரை காவல் துறையினர் கைது செய்தனர்.

8 பேர் கைது
8 பேர் கைது
author img

By

Published : Mar 12, 2022, 10:29 PM IST

சென்னை: வில்லிவாக்கம் பாரதி நகர் பகுதியைச் சேர்ந்தவர் பிரபல ரவுடி டபுள் ரஞ்சித். இவர் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. மார்ச் 10 ஆம் தேதி மாலை நியூ ஆவடி சாலையில் வைத்து ரவுடி டபுள் ரஞ்சித்தை சிலர் சராமாரியாக வெட்டிவிட்டு தப்பிச் சென்றனர். இச்சம்பவம் குறித்து விசாரிக்க தனிப்படை அமைக்கப்பட்டது.

விசாரணையில், "வில்லிவாக்கம் பகுதியில் யார் பெரிய ரவுடி என டபுள் ரஞ்சித் கூட்டாளிகளுக்கும் சொட்ட செல்வம் கூட்டாளிகளுக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்துள்ளது.

மார்ச் 9 ஆம் தேதி டபுள் ரஞ்சித், சொட்ட செல்வத்தை தாக்கியதில் வலது கை தோள்பட்டையில் பலத்த அடியும் இடது கையில் காயமும் ஏற்பட்டன.

சிசிடிவி கேமரா காட்சிகள்

இதில் கோபமடைந்த சொட்ட செல்வத்தின் கூட்டாளிகள் அனைவரும் ஒன்று சேர்ந்து சதி திட்டம் தீட்டினர். செல்வத்தின் கூட்டாளி காட்டான் கார்த்திக், ரஞ்சித்தின் வீட்டுக்குச் சென்று அவரை வெளியே அழைத்துள்ளார். அப்போது காட்டான் கார்த்திக் தந்திரத்தை அறியாத டபுள் ரஞ்சித்தும் தனது இருசக்கர வாகனத்தை எடுத்துக் கொண்டு நியூ ஆவடி சாலை வழியாக சென்றுள்ளார்.

அப்போது சொட்ட செல்வத்தின் கூட்டாளிகள் மறைத்து வைத்திருந்த அரிவாளால் டபுள் ரஞ்சித்தை வெட்டத் தொடங்கினர். இதில் சுதாரித்துக் கொண்ட டபுள் ரஞ்சித் தப்ப முயன்றார். அப்போது, அவரை காட்டான் கார்த்திக் அரிவாளால் வெட்டி கொலை செய்தார்" என்பது தெரியவந்தது.

இந்த கொலையில் தொடர்புடைய காட்டான் கார்த்திக் உள்ளிட்ட 8 பேரை தனிப்படையினர் கைது செய்தனர். பின்னர் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க: பெண் பத்திரிகையாளர்கள் குறித்து சர்ச்சை கருத்து: மன்னிப்பு கேட்க தயார் - எஸ்.வி.சேகர்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.