சென்னையில் இருந்து துபாய் செல்லும் எமரேட்ஸ் ஏா்லைன்ஸ் விமானம் இன்று (டிச.25) காலை புறப்படத் தயாரானது. அந்த விமானத்தில் பயணம் செய்யவந்த பயணிகளின் உடைமைகளை சோதனையிட்டபோது, சென்னையை சோ்ந்த முகமது அசாருதீன் (30) என்பவா் மீது சந்தேகம் ஏற்பட்டதைத் தொடர்ந்து அவரை நிறுத்தி, அவரது உடைமைகளை தீவிர சோதனைக்கு உள்ளாக்கினர்.
அப்போது அவருடைய லேப்டாப் பையில் யூரோ, பவுண்ட் உள்ளிட்ட வெளிநாட்டு கரன்சிகள் மறைத்து வைக்கப்பட்டிருந்ததைக் கண்டுபிடித்து அவற்றை அலுவலர்கள் பறிமுதல் செய்தனா்.
இவற்றின் மதிப்பு சுமாா் 7.78 லட்சம் ரூபாய் ஆகும். இதையடுத்து அந்நபரின் பயணத்தை ரத்து செய்து, அவரைக் கைது செய்த அலுவலர்கள், தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.