ETV Bharat / state

தமிழ்நாட்டில் கரோனா காலத்தில் 511 பள்ளி மாணவிகளுக்கு திருமணம்! - தலைமையாசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு

உலகையே உலுக்கி எடுத்த கரோனா வைரஸ் முதல் அலையின்போது அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு காலத்தில்  511 பள்ளி மாணவிகளுக்குக் குழந்தைத் திருமணம் நடத்தப்பட்டுள்ளது தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

511-child-marriages-held-for-girl-students-during-corona-period கரோனா காலத்தில் பள்ளி மாணவிகளுக்கு நடைபெற்ற 511 குழந்தை திருமணம்.. கல்வி வெளிச்சம் வழங்கிய பள்ளிக்கல்வித்துறை...

author img

By

Published : Jun 8, 2022, 11:48 AM IST

சென்னை: 18 வயதிற்கு உள்பட்ட மாணவர்கள் மற்றும் மாற்றுத்திறன் மாணவர்கள் பள்ளியில் இடையில் நின்றிருந்தால் அவர்களைக் கண்டறிந்து மீண்டும் பள்ளியில் சேர்க்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமெனத் தலைமையாசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.

மேலும் 18 வயதிற்கு உள்பட்ட மாணவர்களைப் பள்ளியில் சேர்ப்பதற்கு வீடு வாரியாக ஆய்வு செய்ய வேண்டும் எனவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், திருமணமாகி பள்ளிக்கு வராமல் இடையில் நின்ற மாணவிகளைக் கண்டறிந்து அவர்களை மீண்டும் பள்ளியில் சேர்த்து பள்ளிக்கல்வித்துறை சிறப்பான பணியைச் செய்து உள்ளது. 13 வயதேயான எட்டாம் வகுப்பு மாணவிக்கும் பெற்றோர் திருமணம் செய்து வைத்த அவலமும் இதில் அரங்கேறியுள்ளது.

கல்வி வெளிச்சம் வழங்கிய பள்ளிக்கல்வித்துறை

உலகையே உலுக்கி எடுத்த கரோனா வைரஸ் தொற்று தமிழ்நாட்டில் 2020 மார்ச் மாதம் தனது பாதிப்புகளை காட்டத் தொடங்கியது. அதனைத் தொடர்ந்து பொதுமக்களை நோய் தொற்றிலிருந்து பாதுகாக்கும் வகையில் அரசால் பொது ஊரடங்கு அறிவிக்கப்பட்டு பள்ளி மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டன.

இதில், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடக்கப்பட்டு நோய்த்தொற்று தாக்கத்திலிருந்து பாதுகாப்பதற்கான பல்வேறு நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டது. இதனால் பொதுமக்கள் தங்கள் சொந்த ஊரிலேயே சென்று தங்கும் சூழ்நிலை ஏற்பட்டது.

குடும்பத்தினர் அவர்களின் வீடுகளுக்குள் அடைந்துகிடந்த நிலையும் இருந்தது. இதுபோன்ற சூழ்நிலைகள் வீட்டிலிருந்த பெண் குழந்தைகளுக்குப் பெற்றோர் தங்களின் உறவினர்களைக் கண்டறிந்து திருமணம் செய்து வைக்கும் அவலநிலையும் அரங்கேறியுள்ளது.

கரோனா காலத்தில் பள்ளி மாணவிகளுக்கு நடைபெற்ற 511 குழந்தை திருமணம்

தமிழ் நாட்டில் குழந்தை திருமணத்தைத் தடுப்பதற்கு அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வரும் நிலையில் பள்ளி மாணவிகளுக்கும் கரோனா காலத்தில் திருமணம் செய்யப் பட்டு இருந்தது கண்டறியப்பட்டுள்ளது. பள்ளியில் இடை நின்ற மாணவர்களைக் கண்டறிந்து மீண்டும் சேர்ப்பதற்காக ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்கள் மூலம் பள்ளி கல்வித்துறை நடவடிக்கை மேற்கொண்டது.

அப்போது குழந்தைத் திருமணம் செய்து கொண்டு இடையில் நின்ற 511 மாணவிகளை ஆசிரியர்கள் கண்டறிந்துள்ளனர். அவர்களை மீண்டும் அழைத்து வந்து பள்ளியில் சேர்த்து உள்ளனர். அதேபோன்று கரோனா தாக்கத்தினால் மாணவர்கள் குடும்ப சூழ்நிலை மற்றும் வறுமையின் காரணமாகப் படிப்பை நிறுத்தி விட்டு விலகிச் சென்றுள்ளனர் அவர்களையும் கண்டறிந்து பள்ளியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

மாணவிகள் திருமணத்தைப் பொருத்தவரை எட்டாம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை படித்த மாணவிகளுக்கு அவர்களின் பெற்றோர் திருமணம் நடத்திவைத்துள்ளனர். அரசு தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தியதன் காரணமாக அதிக அளவில் நடைபெற்று வந்த குழந்தைத் திருமணங்கள் குறைந்திருந்தன.

ஆனால் தற்போது பள்ளிக்கல்வித் துறை நடத்திய ஆய்வில் குழந்தை திருமணங்கள் நடைபெற்று உள்ளது தெரிந்துள்ளது. பதினோராம் வகுப்பில் 417 மாணவிகளும் பன்னிரண்டாம் வகுப்பில் இரண்டு மாணவிகளும் பத்தாம் வகுப்பில் 45 மாணவிகளும் ஒன்பதாம் வகுப்பில் 37 மாணவிகளும் குழந்தை திருமணம் செய்து கொண்டுள்ளனர்.

மேலும் பதிமூன்று வயதை கடந்த எட்டாம் வகுப்பு மாணவிகள் 10 பேருக்கும் குழந்தை திருமணங்கள் நடத்தப்பட்டிருந்தது பள்ளிக்கல்வித்துறையின் ஆய்வில் கண்டறியப்பட்டது.

அவர்களை மீண்டும் அழைத்து வந்து பள்ளியில் சேர்த்து தொடர்ந்து கல்வியை பள்ளிக்கல்வித்துறை வழங்கிவருகிறது. கடுமையான சட்ட திட்டங்கள் மூலம் குழந்தை திருமணத்தை ஒழிப்பதற்கு அரசு தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வந்தாலும், சில நேரங்களில் இதுபோன்ற குழந்தைத் திருமணங்கள் நடைபெறதான் செய்கின்றன என சமூக ஆர்வலர்கள் வருத்தத்துடன் தெரிவிக்கின்றனர்.

இதையும் படிங்க: கோடை கொண்டாட்டம்: அரசு பள்ளி மாணவர்களின் தனித்திறனை ஊக்குவிக்க சிறப்பு பயிற்சி முகாம்!

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.