சென்னை: மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் மற்றும் தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையத்தில், கடந்த ஜனவரி 1ஆம் தேதியில் இருந்து ஜூன் 15ஆம் தேதி வரை நடைபெற்ற பணி நியமனங்களில் முறைகேடு நடைபெற்றுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் 25 மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர் ஒன்றியங்கள் உள்ளன. இந்த ஒன்றியங்களில் பணி நிமனங்களை தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையத்தின் வழிகாட்டுதல்களைப் பின்பற்றியே நடைபெற வேண்டும்.
ஆனால், மதுரை, காஞ்சிபுரம், திருவள்ளுர், திருப்பூர், நாமக்கல், திருச்சி, விருதுநகர், தேனி, தஞ்சாவூர் ஆகிய யூனியன்களில் நடந்த 236 பணி நியமனங்களில் முறைகேடாக நடைபெற்றுள்ளது.
இந்த முறைகேடு புகார் குறித்து, 50க்கும் மேற்பட்ட அலுவலர்களிடம் விசாரணை நடத்த பால்வளத்துறை இயக்குனர், லஞ்ச ஒழிப்புத் துறைக்கு பரிந்துரைத்துள்ளார்.
முன்னாள் ஐ.ஏ.எஸ். அலுவலர் இருவர் உட்பட 50க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.