ETV Bharat / state

ஓசி பிரைட் ரைஸ் கேட்டு தகராறு.. கொதிக்கும் எண்ணெய் ஊற்றிய 5 பேர் கைது! - சென்னை செய்திகள்

தாம்பரத்தில் உள்ள உணவகத்தில் இலவசமாக பிரைட் ரைஸ் கேட்டு கொதிக்கும் எண்ணையை கீழே ஊற்றி உணவகத்தை சூறையாடிய 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Etv Bharatஒசியில் பிரைட் ரைஸ் கேட்டு உணவகத்தை சூறையாடிய 5 பேர் கைது

author img

By

Published : Jan 6, 2023, 3:01 PM IST

ஒசியில் பிரைட் ரைஸ் கேட்டு உணவகத்தை சூறையாடிய 5 பேர் கைது

சென்னை: தாம்பரம் அடுத்த மாடம்பாக்கம் அண்ணாநகர் மெயின்ரோட்டில் ஜெயமணி (59) உணவகம் நடத்தி வருகிறார். நேற்று முன்தினம்(ஜன.4) இரவு மதுபோதையில் கடைக்கு வந்த அதே பகுதியை சேர்ந்த அஜித் மற்றும் கார்த்திக் இருவரும் ஐந்து சிக்கன் ரைஸ் பார்சல் வாங்கிக் கொண்டு பணம் வந்து தருவதாக கூறியுள்ளனர்.

அதற்கு ஜெயமணி பணத்தை கொடுத்து விட்டு பார்சல் எடுத்து செல்லுங்கள் எனக் கூறியபோது அவரிடம் தகராறில் ஈடுபட்டுள்ளனர். பின்னர் அவரது நண்பர்களை அழைத்து சென்று ஹோட்டலில் தகராறு செய்து கொதிக்கும் எண்ணெய் சட்டியை கீழே தட்டி விட்டு பொருட்களை சிதறடித்துள்ளனர்.

இதில் ஹோட்டல் உரிமையாளர் ஜெயமணி அவரது மகன் மணிகண்டன் கடை ஊழியர் நேமராஜ் ஆகியோர் காயம் அடைந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக உணவக உரிமையாளர் ஜெயமணி கொடுத்த புகாரின் பேரில் மாடம்பாக்கத்தை சேர்ந்த அஜித்(27),கார்த்திக் என்ற அரிகரன்(35), பிரவீன் என்ற ஜாக்கோ(20), சிவா (28) உட்பட ஐந்து பேரை கைது செய்தனர் மேலும் இரண்டு பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

இதையும் படிங்க:வீடியோ: பெட்ரோல் பங்கில் பெண் போலீசிடம் வம்பிழுத்த போதை ஆசாமி

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.