சென்னை தண்டையார்பேட்டை ஐஓசி நகர் பகுதியில் நேற்று (டிச. 01) இரவு ஆர்.கே. நகர் காவல் துறையினர் ரோந்துப் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது வினோபா நகர் பகுதியிலிருந்து சந்தேகத்திற்கிடமாக வந்து இளைஞர்களைப் பிடித்து விசாரிக்கும்பொழுது அவரது செல்போனில் பட்டாக்கத்தி படம் இருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்த காவல் துறையினர் காவல் நிலையம் அழைத்துவந்து விசாரணையில் ஈடுபட்டனர்.
அப்போது ஐஓசி கம்பெனி எதிரே தண்டையார்பேட்டை அக்கறை பகுதியில் உள்ள ஒரு வீட்டில் பட்டாக்கத்தி உருவாக்கியது தெரியவந்தது. இதனை அடுத்து ஏழு பட்டாக்கத்திகளைக் கைப்பற்றிய காவல் துறையினர் குற்றத்தில் தொடர்புடைய தண்டையார்பேட்டை பகுதியைச் சேர்ந்த கார்த்தி, முகமது யூசப், சையத் இப்ராஹிம், ரஞ்சித், ஆசிப் ஆகிய ஐந்து பேரையும் கைதுசெய்தனர், அப்போது சிறையிலுள்ள நாகராஜ் கத்தி செய்ய சொல்லியதாகக் கூறி பட்டாக்கத்தி செய்ததாக வாக்குமூலம் கொடுத்தனர்.
இதனையடுத்து அவர்கள் உருவாக்கிய பெரிய அளவிலான ஏழு பட்டாக்கத்திகளைப் பறிமுதல்செய்த காவல் துறையினர் ஐந்து பேரையும் கைதுசெய்து நீதிமன்றத்தில் ஒப்படைத்து மத்திய புழல் சிறையில் அடைத்தனர்.