ETV Bharat / state

மும்பையிலிருந்து சென்னை வந்த 5 லட்சத்து 3 ஆயிரத்து 210 கோவிஷீல்ட் தடுப்பூசிகள்! - chennai latest news

சென்னை: மும்பையிலிருந்து 5 லட்சத்து 3 ஆயிரத்து 210 கோவிஷீல்ட் தடுப்பூசி மருந்துகள் இன்று (ஜூன்.23) சென்னை வந்தடைந்தது.

மும்பையிலிருந்து சென்னை வந்த 5 லட்சத்து  3 ஆயிரத்து 210 கோவீஷீல்ட் தடுப்பூசி!
மும்பையிலிருந்து சென்னை வந்த தடுப்பூசி
author img

By

Published : Jun 23, 2021, 5:09 PM IST

தமிழ்நாட்டில் நாளுக்கு நாள் கரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் தொடர்ந்து அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் பாரத் பயோடெக் நிறுவனத்தால் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட கோவேக்சின் தடுப்பூசியும், சீரம் நிறுவன தயாரிப்பில் உருவாக்கப்பட்ட கோவீஷீல்டு தடுப்பூசி பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

தமிழ்நாட்டில் பல பகுதிகளில் மக்களுக்கு போட தடுப்பூசிகள் இல்லாததால் தட்டுபாடு ஏற்ப்பட்டன. இதனால், கூடுதலாக தடுப்பூசிகள் வழங்க வேண்டும் என தமழ்நாடு அரசு வலியுறுத்தியது.

மும்பையிலிருந்து சென்னை வந்த 5 லட்சத்து 3 ஆயிரத்து 210 கோவீஷீல்ட் தடுப்பூசி!
இந்நிலையில், மும்பையிலிருந்து இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் மூலம் 42 பார்சல்களில் சுமார் 5 லட்சத்து 3 ஆயிரத்து 210 கோவிஷீல்ட் தடுப்பூசி மருந்துகள் சென்னை வந்தடைந்தன. இதில், தமிழ்நாடு அரசு கொள்முதல் செய்த 4 லட்சத்து 67 ஆயிரத்து 210 கோவீஷீல்ட் தடுப்பூசிகளை சுகாதாரத்துறை அலுவலர்கள் பெற்றுக்கொண்டு சென்னை விமான நிலையத்தில் இருந்து குளிர்சாதன வாகனம் மூலம் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள டிஎம்எஸ் வளாகத்தில் உள்ள மாநில தடுப்பூசி சேமிப்பு மையத்திற்கு கொண்டு சென்றனர்.
அதேபோல், ஒன்றிய தொகுப்பிலிருந்து வந்த மூன்று பார்சல்களில் 36 ஆயிரம் கோவிஷீல்ட் தடுப்பூசிகளை சென்னை பெரியமேட்டில் உள்ள மத்திய மருந்து கிடங்கிற்க்கு அனுப்பி வைக்கப்பட்டது.மேலும், இன்று (ஜூன்.23) மாலை புனேவிலிருந்து சென்னை பெரியமேட்டில் உள்ள ஒன்றிய மருந்து கிடங்கிற்கு இரண்டு பார்சல்களில் 24,000 கோவிஷீல்ட் தடுப்பூசி சென்னைக்கு வரவுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: ’கோவாக்சின்’ தடுப்பூசிக்கு அவசரகால அனுமதி: ஆர்வம் காட்டும் WHO

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.