ETV Bharat / state

3 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 3PM - etv bharat top 10 news

ஈடிவி பாரத்தின் 3 மணி செய்திச் சுருக்கம்.

ஈடிவி பாரத் 3 மணி செய்தி
ஈடிவி பாரத் 3 மணி செய்தி
author img

By

Published : Jul 23, 2020, 3:12 PM IST

27 துணை ஆட்சியர்கள் பணி நியமனம்: முதலமைச்சர் பழனிசாமி!

சென்னை: தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, 27 துணை ஆட்சியர்கள் பணி நியமனம் வழங்கிடும் அடையாளமாக 14 பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார்.

லஞ்சம் கேட்கும் அலுவலர்கள் மீது கடும் நடவடிக்கை - பிரபுசங்கர்

சென்னை: குடிநீர் மற்றும் கழிவுநீர் இணைப்புகள் வழங்க லஞ்சம் கேட்கும் அலுவலர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என குடிநீர் சுத்திகரிப்பு வாரியத்தின் செயல் இயக்குநர் பிரபுசங்கர் எச்சரித்தார்.

தமிழ்நாடு ஆளுநர் மாளிகையில் 84 பேருக்கு கரோனா!

சென்னை: ஆளுநர் மாளிகையில் பாதுகாப்புப் பணியில் ஈடுபடும் 147 சிஆர்பிஎப் காவலர்களுக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் 84 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த உயிர் மயிருக்கு சமம்: முகநூல் நேரலையில் இளைஞர் தற்கொலை

திருப்பூர்: முகநூல் நேரலை வீடியோவில் இளைஞர் ஒருவர் மதுபோதையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஒகேனக்கல் நீர்வரத்து 7,700 கன அடியாக உயர்வு

தருமபுரி: கிருஷ்ணராஜசாகர், கபினி அணைகளிலிருந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டதால் 700 கனஅடி அதிகரித்து ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 7,700 கன அடியாக இன்று (ஜூலை23) உயர்ந்துள்ளது.

பாபர் மசூதி இடிப்பு வழக்கு: வாக்குமூலம் அளிக்கும் முரளி மனோகர் ஜோஷி!

டெல்லி: பாபர் மசூதி இடிப்பு வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள முரளி மனோகர் ஜோஷி இன்று சிறப்பு சிபிஐ நீதிமன்றத்தில் தனது வாக்குமூலத்தைப் பதிவு செய்கிறார்.

நான்கு மொழிகளில் தயாராகும் வீரப்பனின் வாழ்க்கை வரலாறு வெப் சீரிஸ்

வீரப்பன் வாழ்க்கையை வைத்து பல்வேறு திரைப்படங்கள் வெளியாகி பல்வேறு அதிர்வுகளை ஏற்படுத்திய நிலையில், தற்போது ஓடிடி தளத்தில் வெப் சீரிஸ் தொடராக நான்கு மொழிகளில் உருவாகவுள்ளது.

ஆர்சிபி பவுலிங் வலிமையாக இல்லை - ஆகாஷ் சோப்ரா

டெல்லி: ஆர்சிபி அணியின் பவுலிங் பெரிய அளவில் சிறப்பாக இல்லை என்று இந்திய அணியின் முன்னாள் பேட்ஸ்மேனும், வர்ணனையாளருமான ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார்.

இரண்டு வாரங்களாக கரோனாவுடன் போராடிவரும் பிரேசில் அதிபர்

பிரேசிலியா: ஜூலை 7ஆம் தேதி அதிபர் ஜெய்ர் போல்சனாரோவுக்கு கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் அவர் தொற்றிலிருந்து மீளாமல் தவித்துவருகிறார்.

73 ஆண்டுகளுக்குப் பின் பாகிஸ்தானில் சீக்கியர்களுக்கு வழங்கப்பட்ட உரிமை!

இஸ்லாமாபாத்: 200 வருட பாரம்பரியமிக்க சீக்கியர்கள் வழிபாட்டுத் தலத்தின் நிர்வாக உரிமையை அந்த மக்களுக்கே வழங்கி பாகிஸ்தான் அரசு உத்தரவிட்டுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.