ETV Bharat / state

தமிழ்நாட்டில் 342 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு - அமைச்சர் மா.சுப்பிரமணியன் - health Minister Ma Subramanian

தமிழ்நாட்டில் 342 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், டெங்கு நோயை தடுப்பதற்கு தேவையான மருந்துகள் கையிருப்பில் உள்ளதாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி
அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி
author img

By

Published : Oct 12, 2021, 5:18 PM IST

சென்னை: சென்னை தி.நகரில் உள்ள பி.டி.தியாகராய அரங்கில், கட்டுமான உரிமையாளர்கள், தொழிலாளர்கள் மற்றும் வணிகர்களுடன் டெங்கு குறித்த விழிப்புணர்வு கூட்டம் இன்று (அக்.12) நடைபெற்றது. இதில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன், சட்டப்பேரவை உறுப்பினர்கள் எழிலன், கருணாநிதி, பிரபாகர் ராஜா மற்றும் வணிகர் சங்க பேரமைப்பு நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் 'பொது சுகாதாரம் மற்றும் மருத்துவம்' என்ற புத்தகத்தை வெளியிட்டு, www.tndph.com என்ற இணையதளத்தை அமைச்சர் மா.சுப்ரமணியன் தொடங்கி வைத்தார்.

அதன் பின் பேசிய அமைச்சர் மா. சுப்ரமணியன், "தமிழ்நாட்டில் இதுவரை 67% பேர் முதல் தவணை தடுப்பூசி செலுத்தி கொண்டுள்ளனர். இந்த எண்ணிக்கை அடுத்த 15 நாட்களில் 70 விழுக்காடாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. 24% பேர் மட்டுமே இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்தி கொண்டுள்ளனர். இரண்டாம் தவணை செலுத்தாதவர்கள் விரைவில் செலுத்திக் கொள்ள வேண்டும்.

அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி

டெங்கு ஒழிப்பு பணி

தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலும், கேரள எல்லையிலும் டெங்கு ஒழிப்பு பணியை ஆய்வு செய்து வருகிறோம். தமிழ்நாட்டில் டெங்குவால் 342 பேர் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இரண்டு நபர்கள் உயிரிழந்துள்ளனர்.

கடந்த ஆண்டு 29 ஆயிரம் டெங்கு காய்ச்சல் மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டது. இந்தாண்டு இதுவரை மட்டும் 89 ஆயிரம் மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும் 21 ஆயிரத்து 968 பணியாளர்கள் கொசு ஒழிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். 14 ஆயிரத்து 833 கொசு மருந்து அடிக்கும் இயந்திரங்களும், அதற்கு தேவையான மருத்துகளும் தயாராக உள்ளது. அனைத்து அரசு விழாக்களிலும் டெங்கு விழிப்புணர்வு கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது.

மெகா தடுப்பூசி முகாம் இல்லை

வரும் வாரம் பண்டிகை காலம் என்பதால் மெகா தடுப்பூசி முகாம் நடைபெறாது. அடுத்து வரும் வாரத்தில் தடுப்பூசி கையிருப்பு பொறுத்து மெகா தடுப்பூசி முகாம் அறிவிக்கப்படும்" என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க: குழந்தைகளுக்கு கோவாக்சின் தடுப்பூசி - நிபுணர் குழு பரிந்துரை

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.