ETV Bharat / state

'சூடானிலிருந்து இதுவரை 247 தமிழர்கள் மீட்கப்பட்டு தாயகம் அழைத்துவரப்பட்டனர்' - சென்னை சூடானில் உள்நாட்டுப் போர்

சூடானிலிருந்து இதுவரை 247 தமிழர்கள் மீட்கப்பட்டு தாயகம் அழைத்துவரப்பட்டுள்ளனர் என சென்னை விமான நிலையத்தில் அமைச்சர் செஞ்சி மஸ்தான் தெரிவித்துள்ளார்.

செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் செஞ்சி மஸ்தான்

author img

By

Published : May 5, 2023, 11:07 PM IST

செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் செஞ்சி மஸ்தான்

சென்னை: சூடானில் உள்நாட்டுப் போர் தீவிரமடைந்துள்ள சூழலில் அங்கு சிக்கி உள்ள இந்தியர்களை ‘ஆப்ரேஷன் காவிரி’ திட்டத்தின் மூலம் மீட்கும் பணிகளை மத்திய, மாநில அரசுகள் மேற்கொண்டு வருகிறது. சூடானில் இருந்து மீட்கப்படும் தமிழர்களை தமிழ்நாடு அரசின் செலவில் அவர்களது சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கும் பணிகளை அயலகத் தமிழர் நலவாழ்வுத்துறை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

அதன் தொடர்ச்சியாக இன்று (மே 05) சூடானில் இருந்து மீட்கப்பட்ட 12 தமிழர்கள் டெல்லியில் இருந்து சென்னை விமான நிலையம் அழைத்துவரப்பட்டனர். அவர்களை விமான நிலையத்தில் அயலாக்க தமிழர் நலவாழ்வுத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான், நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமி ஆகியோர் வரவேற்று ஆறுதல் தெரிவித்தனர். இதையடுத்து அவர்களைச் சொந்த ஊருக்கு தமிழ்நாடு அரசு ஏற்பாடு செய்த வாகனங்களில் அனுப்பி வைத்தனர்.

அப்போது விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய அமைச்சர் செஞ்சி மஸ்தான், “சூடான் நாட்டில் ஏற்பட்டுள்ள உள்நாட்டுப் போரில் சிக்கி உள்ள தமிழர்களை கண்காணித்து தொடர்ந்து அவர்களை தாயகம் அழைத்து வரும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதுவரை சூடான் நாட்டில் இருந்து தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 247 பேரை மத்திய, மாநில அரசுகள் உதவி உடன் பாதுகாப்பாக அழைத்துவரப்பட்டு அவர்களுன் இல்லங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், விருதாச்சலம், சிதம்பரம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 12 பேர் இன்று டெல்லி அழைத்துவரப்பட்டு அங்கிருந்து சென்னை அழைத்துவரப்பட்டுள்ளனர். அங்கு 300க்கும் மேற்பட்ட தமிழர்கள் இருந்ததாக தகவல் வந்தது. அவர்களையும் மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மீதமுள்ளவர்களையும் உடனடியாக தமிழ்நாடு அரசு பாதுகாப்பாக அழைத்து வரும். தமிழர்கள் அனைவரும் தமிழ்நாடு அரசு செலவிலேயே அழைத்து வந்து அவர்கள் இல்லங்களுக்கு அனுப்பப்படுகிறார்கள்’’ என்றார்.

சூடானிலிருந்து மீட்கப்பட்டு அழைத்து வரப்பட்ட அனுபிரியா கூறுகையில், “சூடானில் ஏற்பட்டுள்ள உள்நாட்டு போரில் சிக்கி மிகுந்த அச்சத்தில் இருந்து, எப்படி தாயகம் செல்வது என்று தெரியாமல் தவித்து இருந்தோம். மத்திய,மாநில அரசுகள் அங்குள்ள தூதரகத்தின் மூலம் இணைந்து தங்களை பாதுகாப்பாக அழைத்து வந்தது. மத்திய, மாநில அரசுகளுக்கு நன்றிகள் தெரிவித்துக் கொள்கிறேன்.

அங்கு வெடிகுண்டுகள் மற்றும் துப்பாக்கிச் சூடுகள் நடந்ததால் வெளியேற முடியாமல் சிக்கி தவித்தோம். வீடுகளில் உள்ளேயே துப்பாக்கி தோட்டாக்கள் பாய்ந்தது. உணவு, மின்சாரம் இல்லாமல் மிகவும் அவதிக்கு உள்ளாகி இருந்தோம். அங்கு உள்ள இந்திய தூதரகத்தின் மூலம் இந்தியர்கள் அனைவரும் பாதுகாப்பாக அழைத்துச் செல்லப்பட்டனர்” எனத் தெரிவித்தார்.

மீட்கப்பட்ட ரமேஷ் கூறுகையில், “தாங்கள் சூடானிலிருந்து சென்னை வரும் வரை தமிழ்நாடு அரசு அதிகாரிகள் தங்களைத் தொடர்பு கொண்டு அனைத்து தேவைகளையும் கேட்டுக் கொண்டு பாதுகாப்பாக அழைத்து வந்துள்ளனர். நாங்கள் வசித்த பகுதியில் விமானத்தில் சென்று வெடிகுண்டுகள் வீசிக்கொண்டிருந்தனர். இதனால் உணவு, தண்ணீர், மின்சாரம் இல்லாமல் கடுமையான அவதிக்குள்ளாகி அனைவரும் அச்சத்தில் இருந்தோம். தமிழ்நாடு அரசும், மத்திய அரசும் இணைந்து பாதுகாப்பாக அனைவரையும் அழைத்து வந்துள்ளனர். அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்” என்றார்.

இதையும் படிங்க: சூடானில் இருந்து வந்த 117 இந்தியர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர் - கரோனாவுக்கு இல்லை?

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.