ETV Bharat / state

24,000 நியாயவிலைக் கடை ஊழியர்களுக்கு நாளொன்றுக்கு ரூ.200! - ration shop employees

சென்னை: கோவிட்-19 ஊரடங்கு காலத்தில் பணியாற்றும் நியாயவிலைக் கடை ஊழியர்களுக்குச் செலவினமாக நாளொன்றுக்கு 200 ரூபாய் வழங்கப்படும் எனத் தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

24,000 ration shop employees will be paid Rs 200 per day
24,000 ரேஷன் கடை ஊழியர்களுக்கு செலவினமாக நாளொன்றுக்கு ரூ.200 வழங்கப்படும்!
author img

By

Published : May 16, 2020, 9:51 AM IST

கரோனா வைரஸ் (தீநுண்மி) நோய்த்தொற்றின் தாக்கத்தைக் கட்டுப்படுத்தும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுவரும் தமிழ்நாடு அரசு, அதன் பரவலைத் தடுக்க மாநிலம் முழுவதும் ஊரடங்கை அறிவித்துள்ளது.

அத்தியாவசிய பொருள்கள் பெறுவதற்கான கடைகள் மட்டுமே தற்போது திறந்திருக்கின்றன. ஊரடங்கின் எதிரொலியாக சமூகத்தின் பல்வேறு தரப்பினரும் பொருளாதார ரீதியாகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்டிருக்கும் பல்வேறு தரப்பினருக்கும் அரசு சார்பில் உதவிகள் வழங்கப்படுகின்றன.

இதன் ஒரு பகுதியாக, தமிழ்நாடு முழுவதும் பொது விநியோகத் திட்டத்தின்கீழ் ஏழை, நடுத்தர குடும்பத்தார்கள் பயன்பெறும் வகையில் நியாயவிலைக் கடைகளில் அத்தியாவசிய பொருள்களான அரிசி, பருப்பு, சமையல் எண்ணெய் போன்றவை ஏப்ரல் மாதம் முதல் விலையில்லாமல் வழங்கப்பட்டுவருகின்றன. இது தொடர்ச்சியாக மே, ஜூன் மாதங்களிலும் வழங்கப்படும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

இந்நிலையில், ஊரடங்கு காலத்தில் பணிபுரியும் நியாயவிலைக் கடை ஊழியர்களுக்கு செலவினமாக நாளொன்றுக்கு 200 ரூபாய் வழங்கப்படும் எனத் தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

இந்த அறிவிப்பின் மூலமாகத் தமிழ்நாட்டில் உள்ள 34 ஆயிரம் நியாயவிலைக் கடைகளில் பணியாற்றும் 24 ஆயிரம் பணியாளர்கள் பயன்பெறுவார்கள் என அறியமுடிகிறது.

இதையும் படிங்க : கிராம நிர்வாகி மறைவுக்கு முதலமைச்சர் இரங்கல் - ரூ. 50 லட்சம் நிவாரணம் அறிவிப்பு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.