ETV Bharat / state

தமிழ்நாட்டில் புதிதாக 2,116 பேருக்கு கரோனா - corona

தமிழ்நாட்டில் புதிதாக 2,116 பேருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் புதிதாக 2,116 பேருக்கு கரோனா

author img

By

Published : Jul 20, 2022, 10:09 PM IST

சென்னை: பொது சுகாதாரத்துறை இயக்குனரகம் இன்று வெளியிட்டுள்ள தகவலில், தமிழ்நாட்டில் மேலும் 32ஆயிரத்து 495 நபர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று பாதிப்பு கண்டறிவதற்கான ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, அதில் அமெரிக்கா , ஜெர்மனியில் இருந்து வந்த நபர்கள் உட்பட 2,116 நபர்களுக்கு வைரஸ் தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் இதுவரை 6 கோடி 65 லட்சத்து 91 ஆயிரத்து 763 நபர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று பாதிப்பு கண்டறிவதற்கான ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, 35 லட்சத்து 24 ஆயிரத்து 258 நபர்கள் கரோனா வைரஸ் தொற்று பாதிப்பிற்கு ஆளாகி இருந்தனர் என குறிப்பிடப்பட்டுள்ளது.

அவர்களில் 16,702 பேர் மருத்துவமனைகள் மற்றும் தனிமைப்படுத்தும் மையங்களில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த 24 மணி நேரத்தில் 2,243 பேர் குணமடைந்து இருக்கின்றனர், இவர்களுடன் சேர்த்து குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 34 லட்சத்து 69 ஆயிரத்து 526ஆக உயர்ந்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் சென்னையில் புதிதாக 528 நபர்களுக்கும்,செங்கல்பட்டில் 285 நபர்களுக்கும், கோயம்புத்தூரில் 167 நபர்களுக்கும் திருவள்ளூரில் 105 நபர்களுக்கும் என அனைத்து மாவட்டங்களிலும் நோய் தொற்று பரவலாக உள்ளது. மேலும் நோய் தொற்றிற்காக பரிசோதனை செய்யப்படும் நபர்களின் எண்ணிக்கையில் மாநில அளவில் பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை 6.9% ஆக உள்ளது.

இதையும் படிங்க: ஊசி மருந்துகளின் பயன்பாட்டால் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு - ஆய்வில் வெளிவந்த அதிர்ச்சி!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.