சென்னை: பொது சுகாதாரத் துறை இயக்குநரகம் ஜூலை 26 ஆம் தேதி வெளியிட்டுள்ள புள்ளி விவர தகவலில், தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் புதிதாக 25 ஆயிரத்து 871 நபர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று பாதிப்பு கண்டறிவதற்கான ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதன் மூலம் தமிழ்நாட்டில் இருந்த 1,845 நபர்களுக்கும், ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து வந்த ஒருவர் உட்பட 1,846 நபர்களுக்கு மேலும் புதிதாக கரோனா வைரஸ் தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் இதுவரை 6 கோடி 67 லட்சத்து 82 ஆயிரத்து 53 நபர்களுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதனால் தமிழ்நாட்டில் 35 லட்சத்து 36 ஆயிரத்து 92 நபர்கள் கரோனா வைரஸ் தொற்று பாதிப்பிற்கு உள்ளாகி இருந்தனர் என்பது தெரியவந்தது.
அவர்களில் தற்போது மருத்துவமனைகள் மற்றும் தனிமைப்படுத்தும் மையங்களில் 14,714 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 225 பேர் குணமடைந்துள்ளனர். இதன் மூலம் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 34 லட்சத்து 83 ஆயிரத்து 346 என உயர்ந்துள்ளது.
சென்னையில் 409 பேருக்கும், செங்கல்பட்டில் 194 பேருக்கும், கோயம்புத்தூரில் 176 பேருக்கும், திருவள்ளூரில் 82 பேருக்கும் என தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டங்களிலும் நோய் தொற்று பாதிப்பு இருக்கிறது.
இதையும் படிங்க:தமிழ்நாட்டில் புதிதாக 1,903 பேருக்கு கரோனா உறுதி