ETV Bharat / state

'வரி குறைப்பினால் நாளொன்று 11 லட்சம் லிட்டர் பெட்ரோல் விற்பனை' - 11 lakh liters of petrol sold per day due to tax cuts

பெட்ரோல் மீதான வரி குறைப்பினால் நாள் ஒன்றுக்கு 11 லட்சத்து 21 ஆயிரம் லிட்டர் பெட்ரோல் விற்பனையாவதாக நிதித் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.

நிதித் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

author img

By

Published : Aug 19, 2021, 1:48 PM IST

சென்னை: தமிழ்நாட்டில் பெட்ரோல் மீதான வரியில் மூன்று ரூபாய் குறைத்ததால் ஆகஸ்ட் 14ஆம் தேதிமுதல் நாள் ஒன்றுக்கு 11 லட்சத்து 21 ஆயிரம் லிட்டர் பெட்ரோல் விற்பனை அதிகரித்துள்ளது என பழனிவேல் தியாகராஜன் பேரவையில் தெரிவித்துள்ளார்.

கலைவாணர் அரங்க மண்டபத்தில் நடைபெற்ற சட்டப்பேரவைக் கூட்டத் தொடரில் திருத்திய நிதிநிலை அறிக்கை கடந்த 13ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்டது. அதேபோல், வேளாண் நிதிநிலை அறிக்கை ஆகஸ்ட் 14ஆம் தேதியன்று தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து, அதன் மீதான பொது விவாதம் கடந்த மூன்று நாள்களாக நடைபெற்று வந்தது.

அரசியலைப் பொருளாதார வளர்ச்சிக்காகச் செய்ய வேண்டும்

இன்றைய சட்டப்பேரவைக் கூட்டத் தொடரில் திருத்திய நிதிநிலை அறிக்கை மீதான பொது விவாதத்திற்கு அமைச்சர்கள் பதிலுரை அளிக்கின்றனர். அந்த வகையில் பழனிவேல் தியாகராஜன் அவையில் பேசும்போது, "ஆகஸ்ட் 1 முதல் 13ஆம் தேதிவரை ஒன்பதாயிரத்து 188 கிலோ லிட்டர் பெட்ரோல் விற்பனை செய்யப்பட்டது.

இந்நிலையில் கடந்த 14ஆம் தேதியிலிருந்து பெட்ரோல் மூன்று ரூபாய் குறைத்ததால், இந்த நான்கு நாள்களில் 10 ஆயிரத்து 315 கிலோ லிட்டர் விற்பனை அதிகரித்துள்ளது. தமிழ்நாட்டில் ஆகஸ்ட் 14ஆம் தேதி முதல் பெட்ரோல் மீதான வரி குறைப்பினால் நாள் ஒன்றுக்கு 11 லட்சத்து 21 ஆயிரம் லிட்டர் பெட்ரோல் விற்பனை அதிகரித்துள்ளது.

அதிமுகவினரை வெளியேற்ற உத்தரவிட்டேனா? - அப்பாவு விளக்கம்

அதாவது சராசரியாக நாள் ஒன்றுக்கு 11 லட்சத்து 21 ஆயிரம் லிட்டர் விற்பனை அதிகரித்துள்ளது. இதனால் யார் யார் பயன் அடைந்துள்ளார்கள் என்பதை நாம் தெரிந்து கொள்ளலாம். அரசியலைப் பொருளாதார வளர்ச்சிக்காகச் செய்ய வேண்டும்.

அதிமுக ஆட்சியின் திட்டங்கள் குறித்து அறிக்கை

எல்லாருக்கும் எல்லாம் என்ற முறையை முதலமைச்சர் தெரிவித்துள்ளார். அவரது அனுமதியோடு எல்லாருக்கும் எல்லாம், சமூக நீதி, பொருளாதார நீதிக்கு ஏற்ப மாற்ற விரும்புகிறேன். கடந்த 10 ஆண்டுகளில் யாரெல்லாம், எதையெல்லாம் கைப்பற்ற முடியுமோ கைப்பற்றிக் கொள்ளுங்கள் என்ற நடைமுறையில் நடந்துள்ளது.

கலைவாணர் அரங்கம்
கலைவாணர் அரங்கம்

அரசின் இந்த நடவடிக்கைகள் சீர்திருத்தத்தின் ஒரு தொடக்கம்தான். இன்னும் பல நல்ல திட்டங்கள் வரும். 14ஆவது நிதிக்குழுவின்படி வரவு - செலவுத் திட்டத்தின் மூலம் கடந்த ஆண்டு மட்டும் தமிழ்நாட்டின் சொந்த வருமானம் 90 ஆயிரம் கோடி குறைந்துள்ளது. கடந்த நான்கு ஆண்டுகளில் தமிழ்நாட்டில் வருவாய் இழப்பு மட்டும் நான்கு லட்சம் கோடி ரூபாய் அதிகரித்துள்ளது.

கடந்த ஆட்சியில் 110 விதியின்கீழ் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள் எத்தனை, என்னென்ன என்பன குறித்து அறிக்கை வெளியிடப்படும். அதிமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள், நிறைவேற்றப்படாத திட்டங்கள் ஆகியவை குறித்தும் அறிக்கை வெளியிடப்படும். இந்த நடப்புக் கூட்டத் தொடரிலேயே அறிக்கை அளிக்கப்படும்" எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: 'சமூகநீதிக் காவலர் மோடியின் ஆட்சியில் விவசாயிகள் தற்கொலை இல்லை'

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.