ETV Bharat / state

தமிழ்நாட்டில் மேலும் 104 பேருக்கு கரோனா பாதிப்பு! - Tamilnadu corona positive cases update

சென்னை: தமிழ்நாட்டில் மேலும் 104 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று பாதிப்பு உறுதியானதையடுத்து, மாநிலத்தில் தொற்றால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 2,162 ஆக அதிகரித்துள்ளது.

104 new Corona positive cases reported in Tamilnadu

author img

By

Published : Apr 29, 2020, 8:46 PM IST

இதுதொடர்பாக மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்ட அறிக்கையில், தமிழ்நாட்டில் ஒரு லட்சத்து 9 ஆயிரத்து 961 பேரின் பரிசோதனை மாதிரிகள் பெறப்பட்டன. இதில் இன்று ஒரே நாளில் மட்டும் 104 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தமிழ்நாட்டில் கரோனா வைரஸ் தொற்றுப் பாதித்தவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 162 ஆக அதிகரித்துள்ளது.

இதுவரை சோதனை செய்யப்பட்டதில் ஒரு லட்சத்து 5 ஆயிரத்து 864 பேருக்கு நோய் தொற்று இல்லை என்பது உறுதியாகி உள்ளது. மேலும், ஆயிரத்து 935 நபர்களின் சளி, ஆய்வகங்களில் பரிசோதனை செய்யப்பட்டுவருகிறது. 8 ஆயிரத்து 886 பேருக்கு மீண்டும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

922 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர். இதுவரை ஆயிரத்து 210 பேர் பூரண குணமடைந்து வீட்டிற்குச் சென்றுள்ளனர். இதில் இன்று மட்டும் 82 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மேலும், 922 பேர் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவருகின்றனர்.

இன்று மட்டும் இரண்டு பேர் உயிரிழந்ததையடுத்து, கரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27 பேராக அதிகரித்துள்ளது. இன்று நடத்தப்பட்ட ரத்த பரிசோதனை முடிவுகளில் சென்னை மாவட்டத்தில் 96 பேருக்கும், செங்கல்பட்டு மாவட்டத்தில் 4 பேருக்கும், காஞ்சிபுரம் மாவட்டத்தில் மூன்று பேருக்கும், திருவண்ணாமலை மாவட்டத்தில் ஒருவருக்கும் ,விழுப்புரம் மாவட்டத்தில் இரண்டு பேருக்கும் என 104 பேருக்கு உறுதியாகியுள்ளது.

தொற்று பாதிக்கப்பட்ட 37 மாவட்டங்கள் விவரம்:

  • சென்னை : 768
  • கோயம்புத்தூர் : 141
  • திருப்பூர் : 112
  • திண்டுக்கல் : 80
  • மதுரை : 79
  • செங்கல்பட்டு : 73
  • ஈரோடு : 70
  • திருநெல்வேலி : 63
  • நாமக்கல் : 61
  • தஞ்சாவூர் : 55
  • திருவள்ளூர் : 54
  • திருச்சிராப்பள்ளி : 51
  • விழுப்புரம் : 50
  • நாகப்பட்டினம் : 44
  • தேனி : 43
  • கரூர் : 42
  • ராணிப்பேட்டை : 39
  • தென்காசி : 38
  • விருதுநகர் : 32
  • சேலம் : 31
  • திருவாரூர் : 29
  • தூத்துக்குடி : 27
  • கடலூர் : 26
  • காஞ்சிபுரம் : 23
  • வேலூர் : 22
  • திருப்பத்தூர் : 18
  • கன்னியாகுமரி : 16
  • திருவண்ணாமலை : 15
  • ராமநாதபுரம் : 15
  • சிவகங்கை : 12
  • நீலகிரி : 9
  • கள்ளக்குறிச்சி : 9
  • பெரம்பலூர் : 7
  • அரியலூர் : 6
  • புதுக்கோட்டை : 1
  • தருமபுரி : ஒருவர் எனப் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதையும் படிங்க...மனைவியைப் பார்க்க கிருஷ்ணகிரி வந்துச் சென்ற மருத்துவருக்கு கரோனா

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.