செங்கல்பட்டு மாவட்டம் அச்சிறுப்பாக்கம் அடுத்துள்ளது சிறுக்கரணை கிராமத்தில் 100-க்கும் மேற்பட்ட குறவர் சமூகத்தினர் வசித்துவருகின்றனர். இவர்களுக்கு முறையான குடிநீர் வசதி செய்துத் தரப்படவில்லை எனக் கூறப்படுகிறது.
இதனால், பல கிலோ மீட்டர் சென்று குடிநீர் பிடித்து வர வேண்டிய அவலநிலை நிலவுவதாக வேதனை தெரிவிக்கின்றனர். எனவே, தங்கள் குடியிருப்புப் பகுதிக்கு குடிநீர் இணைப்பு வழங்க வேண்டி அலுவலர்களிடம் பலமுறை மனு கொடுத்தனர்.
ஆனால், குழாய் அமைக்க பள்ளம் தோண்டியதோடு பணிகள் அப்படியே நிற்பதாகக் கூறுகின்றனர். குடிநீர் கிடைக்காத பிரச்சினையோடு, பள்ளங்களில் தேங்கும் தண்ணீரால் கொசுக்கள் உற்பத்தியாக புதுப் பிரச்சினையும் ஏற்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் புலம்புகின்றனர்.
மேலும், சித்தாமூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்திற்கு நடையாய் நடந்தும் எந்த முன்னேற்றமும் இல்லை எனவும் அவர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். தொடர்ந்து, அலுவலர்கள் தங்களுக்கு குடிநீர் கிடைக்க வழி செய்ய வேண்டும் என மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கைவிடுததுள்ளனர்.
இதையும் படிங்க: கிருஷ்ணகிரி கேஆர்பி அணையிலிருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறப்பு