சென்னை கேளம்பாக்கம் பகுதியில், சுஷில் ஹரி உண்டு - உறைவிடப்பள்ளி இயங்கி வருகிறது. இதன் தாளாளராக சிவசங்கர் பாபா இருந்து வருகிறார். இவர் தனது பள்ளியில் பயின்ற மாணவிகளிடம், பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனைத்தொடர்ந்து, போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து, டெல்லியில் பதுங்கியிருந்த சிவசங்கர் பாபாவை, சி.பி.சி.ஐ.டி., போலீசார் கைது செய்து தமிழ்நாட்டிற்கு கொண்டு வந்தனர். அதன் பின் செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
சிவசங்கர் பாபாவுக்கு ஜூலை 1ஆம் தேதி வரை நீதிமன்றம் காவல் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார். இதனையடுத்து, செங்கல்பட்டு சிறையில் சிவசங்கர் பாபா அடைக்கப்பட்டார். இந்நிலையில், சிறையில் சிவசங்கர் பாபாவுக்கு திடீரென மூச்சுத்திணறல் பிரச்சினை ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
இதனையடுத்து, அவரை சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கிருந்து அவர் மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அனுமதிக்கப்பட்டுள்ளார்.