செங்கல்பட்டு: திருக்கழுக்குன்றத்தைச் சேர்ந்த சதீஷ்குமார், மகளிர் சுயஉதவிக் குழுவைச் சேர்ந்த பெண்களிடம், நிதி நிறுவனத்தில் கடன் வாங்கித் தருவதாகக் கூறி, அவர்களிடமிருந்து விவரங்களைப் பெற்றுள்ளார்.
இதையடுத்து விவரம் கொடுத்தவர்களின் வங்கிக் கணக்கில் தலா 40 ஆயிரம் ரூபாய், சுயஉதவிக் குழுவைச் சேர்ந்தபெண்களின் கணக்கில் வரவு வைக்கப்பட்டிருக்கிறது.
இதனைத்தொடர்ந்து, நிதி நிறுவன அலுவலர்களுக்குத் தெரியாமல் சதீஷ் குமார், அந்தப்பெண்களிடம் , “வேறு ஒருவரின் லோன் உங்களுக்குத் தவறாக வந்துவிட்டது. உங்களது லோன் விரைவில் வரும்” எனக் கூறி, ஏமாற்றி, அவர்களிடம் இருந்து சுமார் ரூ.13 லட்சத்திற்கும் மேல் பெற்றுக்கொண்டு, தப்பிச் சென்றுவிட்டார்.
இந்நிலையில், நிதி நிறுவன ஊழியர்கள், அந்தப்பெண்களிடம் லோன் வாங்கியதற்கு மாதத்தவணை கேட்டுள்ளனர். அதற்கு, “நாங்கள் லோன் வாங்கவில்லை. அந்தப் பணத்தை சதீஷ்குமாரிடம் கொடுத்துவிட்டோம்” என ஏமாந்தது தெரியாமல் கூறியுள்ளனர், அந்த அப்பாவி சுய உதவிக்குழு பெண்கள்.
இதுகுறித்து தனியார் நிதி நிறுவனம் சார்பில், செங்கல்பட்டு மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவில் புகார் அளிக்கப்பட்டது.
அதன்பேரில் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து, சதீஷ்குமாரை கைது செய்தனர். பின்னர் அவரை, செங்கல்பட்டு குற்றவியல் நீதிமன்றம் முன்நிறுத்தி, சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: ஒரே இடத்தில் 7 ரவுடிகள்.. கொத்தாக தூக்கிய போலீஸ்... திருவள்ளூரில் திக் திக்..!