செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அருகேயுள்ள மாம்பாக்கத்தில் மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகம் செயல்படுகிறது. இங்கு செய்யூர், மதுராந்தகம் ஆகிய தாலுகாவைச் சேர்ந்த பொதுமக்கள் வாகனங்களுக்கு பதிவு உள்ளிட்ட சான்றிதழ்கள் பெற வருகின்றனர்.
இந்த அலுவலகத்திற்கு மாதந்தோறும் குறைந்தது 1,000 முதல் 1,500 வரையிலான பொதுமக்கள் வந்து செல்கின்றனர். இதுவரை அலுவலகம் வாடகை கட்டடத்தில் செயல்படுகிறது எனத் தெரிகிறது. மேலும் அலுவலகத்திற்கு வரும் பொதுமக்கள் தங்கள் வாகனங்களை நிறுத்தக்கூட இடம் இல்லாமல் தவித்து வருகின்றனர்.
தற்போது முதுகரை அடுத்த சிறுநல்லூர் பகுதியில் அலுவலகம் அமைக்க மாற்று இடம் ஒதுக்கப்பட்டுள்ளதாக அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: தலைக்கவசம் ஏன் முக்கியம்? - சிறப்புக்கட்டுரை