செங்கல்பட்டு மாவட்டம் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோயிலின் ஆன்மிக குரு பங்காரு அடிகளார் - லட்சுமி பங்காரு அடிகளார் தம்பதியின் சதாபிஷேக சுபமுகூர்த்த முத்து விழா இன்று கோயிலின் சித்தர் பீடத்தில் நடைபெற்றது.
பக்தர்களும் பொதுமக்களும் காலை 9 மணிக்கு மாப்பிள்ளை, பெண் அழைப்பு போன்று தம்பதியர் இருவரையும் ரதத்தில் ஊர்வலமாக அழைத்து வந்து சிறப்பு பூஜைகள் செய்தனர். பின்னர், பங்காரு அடிகளார் அவருடைய மனைவியின் கழுத்தில் மாங்கல்யம் அணிவித்தார். இதையடுத்து, அவர்கள் குடும்பத்தினர் இருவருக்கும் நடைமுறை மரியாதை செய்து வழிபட்டனர் .
இந்நிகழ்ச்சியில், பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ், காங்கிரஸ் முன்னாள் எம்பி கிருஷ்ணசாமி, இசையமைப்பாளர் தேவா, நடிகர் எஸ்வி சேகர் உள்பட ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டு ஆசி பெற்றனர்.
இதையும் படிங்க: கொரோனா வைரஸ் தாக்கம்: பங்குச்சந்தை மீண்டும் சரிவு