செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் தாலுகாவிற்கு உட்பட்ட மேற்கு செய்யூர் பகுதியில் தொடர்ந்து சில நாட்களாகப் பெய்து வரும் மழையால் இப்பகுதியில் உள்ள கால்வாயில் நீர் வந்து கொண்டிருக்கிறது. இதனால் கால்வாயை ஒட்டியுள்ள வீடுகளின் சுவர் இடிந்து விழுந்து வருவதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், தொடர் மழையால் கால்வாய்களில் நீர் அதிகமாக வருவதால் பலமிழந்த சுவர்களால் இரண்டு வீடுகளின் சுவர்கள் இடிந்து விழுந்தன. இதில் லோகபெருமாள் என்பவரின் வீட்டுச் சுவர் இடிந்து விழுந்ததில், அவரின் பசுமாடு உயிரிழந்தது.
தகவலறிந்த செய்யூர் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினரும், தற்போதைய அதிமுக ஒன்றிய செயலாளருமான ராஜூ பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து ஆறுதல் கூறினார். அரசு சார்பில் உதவிகள் வழங்க, ஆவன செய்வதாகவும் உறுதி அளித்தார்.
இதையும் படிங்க: திமுக, பாஜக, இப்ப ரஜினி - அர்ஜுனமூர்த்தி பின்னணி?