செங்கல்பட்டு: சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின் எல்லை விரிவுபடுத்தப்பட்டு, செங்கல்பட்டு மாவட்டம் முழுமைக்கும் சிஎம்டிஏ-வின் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்படும் என்று மானிய கோரிக்கை அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ராகுல் நாத், மாவட்டத்திலுள்ள அனைத்து ஊராட்சி மன்றத் தலைவர்களுக்கும் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார்.
அதில் அனைத்து ஊராட்சிகளும் ஏப்ரல் 1 ஆம் தேதி சிறப்புக் கூட்டம் ஏற்பாடு செய்ய வேண்டும். செங்கல்பட்டு மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளும் சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின் கட்டுப்பாட்டில் கொண்டுவர வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றி அனுப்பிவைக்குமாறு அறிவுறுத்தியுள்ளார்.
இதையும் படிங்க: உகாதி நன்நாளில் விலை குறைந்த தங்கம்!