ETV Bharat / state

கற்சிற்பக் கைவினைஞர்கள் உருவாக்கிய 45 அடி உயர சிற்பக்கலைத் தூண்: திறந்துவைத்த முதலமைச்சர் - மாமல்லபுரம்

மாமல்லபுரத்தின் நுழைவுவாயிலில் அமைக்கப்பட்டுள்ள 45 அடி உயர சிற்பக்கலைத் தூணை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

கற்சிற்ப கைவினைஞர்கள் உருவாக்கிய 45 அடி உயர சிற்பக்கலைத் தூணை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்

author img

By

Published : Jul 27, 2022, 10:07 PM IST

செங்கல்பட்டு: தமிழ்நாடு அரசு, கைத்திறன் தொழில்கள் வளர்ச்சிக்கழகம் (பூம்புகார்) கைவினைஞர்களின் மேம்பாட்டிற்காகவும், அவர்கள் உற்பத்தி செய்யும் பொருட்களின் விற்பனையை மேம்படுத்திடவும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மாமல்லபுரத்தின் கற்சிற்ப கைவினைஞர்களின் கற்சிற்பங்களை உலகளவில் எடுத்துச்செல்லும் வகையில் பல்வேறு முயற்சிகளும் எடுக்கப்பட்டு வருகின்றன.

அந்த வகையில், மாமல்லபுரத்தில் கைவினைக் கலையில் ஈடுபட்டுள்ள கைவினைஞர்களின் நலனுக்காக “கைவினை சுற்றுலா கிராமம்” என்ற திட்டம் மாநில மற்றும் ஒன்றிய அரசின் நிதியுதவியுடன் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இதன் ஒரு பகுதியாக, மாமல்லபுரத்தின் நுழைவு வாயிலில் 45 அடி உயரத்தில் அழகிய “சிற்பக்கலைத் தூண்” கலைநயமிக்க பல்லவர் கால சிம்மம், யாழி, தோகை விரித்தாடும் மயில்கள், யானைக்கூட்டம், ஆகியவைகளின் உருவங்கள் பொறிக்கப்பட்டு மாமல்லபுரத்திற்கு வருகைபுரியும் உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

மேலும், மாமல்லபுரத்தில் 28.7.2022 முதல் 10.8.2022 வரை நடைபெறவுள்ள 44ஆவது செஸ் ஒலிம்பியாட் சர்வதேச சதுரங்கப் போட்டியில் பங்குபெறும் சதுரங்க வீரர்களையும், போட்டியினைக் காண வருகை புரியும் சுற்றுலாப் பயணிகளையும், பொதுமக்களையும் கவரும் வகையில் இக்கற்சிற்பக் கலைத்தூண் அமைக்கப்பட்டுள்ளது.

கற்சிற்ப கைவினைஞர்கள் உருவாக்கிய 45 அடி உயர சிற்பக்கலைத் தூணை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
கற்சிற்பக் கைவினைஞர்கள் உருவாக்கிய 45 அடி உயர சிற்பக்கலைத் தூண்

இந்நிகழ்ச்சியில் நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன், பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ. வேலு, குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், சுற்றுச்சூழல் காலநிலை மாற்றம், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் சி. வீ. மெய்யநாதன், மற்றும் அரசு உயர் அலுவலர்கள் பங்கேற்றனர்.

இதையும் படிங்க: 44 ஆவது செஸ் ஒலிம்பியாட்; 45 நாடுகளில் இருந்து சென்னை வந்தடைந்த 553 வீரர்கள்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.