புதுச்சேரி மாநிலம், தன்வந்திரி நரைச் சேர்ந்தவர் சற்குணம். இவர் இன்று மனைவி வினோதினி, இரு குழந்தைகளுடன் காரில் பூந்தமல்லி நோக்கி சென்றுள்ளார். அப்போது திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் கார் சென்று கொண்டிருக்கும் போது காரிலிருந்து புகை வருவதைக் கண்ட சற்குணம், காரிலிருந்து இறங்கியுள்ளார்.
இதனையடுத்து கார் தீப்பற்றி எரிவதை அறிந்து காரில் இருந்தவர்கள் உடனடியாக காரைவிட்டு இறங்கியதால் உயிர்சேதம் ஏற்படாமல் தவிர்க்கப்பட்டது. இதனையடுத்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத்துறையினர், தீயை அணைத்தனர். இருப்பினும் கார் முழுவதுமாக எரிந்து நாசமானது. மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த படாளம் காவல் துறையினர், கார் தீப்பற்றியது சம்பந்தமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க:மது அருந்துவதில் தகராறு - நண்பரை கொலை செய்ய முயன்ற நபருக்கு வலைவீச்சு!