ETV Bharat / state

சொந்தப் பிரச்சினையைப் பொதுப் பிரச்சினையாக மாற்றிய ஆத்தூர் சுங்கச்சாவடி ஊழியர்கள்!

செங்கல்பட்டு: நிறுவன பிரச்சினையைப் பொதுப் பிரச்சினையாக மாற்ற முயன்ற ஆத்தூர் சுங்கச்சாவடி ஊழியர்கள் சிலரால் தேவையற்ற பரபரப்பு ஏற்பட்டது.

ஆத்தூர் டோல்கேட் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
ஆத்தூர் டோல்கேட் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
author img

By

Published : Apr 13, 2021, 10:25 AM IST

செங்கம் தொகுதியைச் சேர்ந்த முன்னாள் திமுக எம்எல்ஏ கிரியுனுடைய கார் பிப்ரவரி 23ஆம் தேதி செங்கல்பட்டு மாவட்டம் ஆத்தூர் சுங்கச்சாவடியைக் கடந்துள்ளது.

அப்போது காரில் வந்தவர்களுக்கும் சுங்கச்சாவடி ஊழியர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து கிரி, தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திற்குச் சுங்கச்சாவடி ஊழியர்கள் குறித்து ஆதாரப்பூர்வமாகப் புகார் அனுப்பியுள்ளார்.

இந்தப் புகாரைத் தொடர்ந்து, தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் உத்தரவின்பேரில், சுங்கச்சாவடி நிர்வாகம், அங்கு பணிபுரிந்த சரவணன், காளிதாஸ், முருகன், ராஜமுத்து ஆகியோரைப் பணியிடை நீக்கம்செய்துள்ளது.

உள்ளூர் பகுதியைச் சேர்ந்த இவர்கள், தங்கள் பணியிடை நீக்கத்திற்கு, நியாயம் கோரி, நேற்று (ஏப்ரல் 12) தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி, பந்தல் அமைத்து ஊழியர்களைத் திரட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆத்தூர் டோல்கேட் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
ஆத்தூர் சுங்கச்சாவடி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

இந்தச் சம்பவம் குறித்து தகவல் அறிந்துவந்த அச்சிறுப்பாக்கம் காவல் துறையினர், நிறுவன சொந்தப் பிரச்சினைக்காக, பொது வெளியில் சட்டம் ஒழுங்குப் பிரச்சினையை ஏற்படுத்தக் கூடாது என எச்சரித்து, அவர்களைக் கலைந்துபோகச் செய்தனர்.

அதனைத் தொடர்ந்து, நிறுவனத்திற்கு உள்ளே ஊழியர்களைத் திரட்டி போராட்டம் நடைபெற்றது. இது குறித்து தகவல் சேகரிக்கச் சென்ற செய்தியாளர்களையும் அவர்கள் அவமதித்து அட்டகாசம் செய்தது அனைவரையும் முகம் சுளிக்கவைத்தது.

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.