செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகத்தைச் சேர்ந்தவர், கங்கா. இவர் பன்றி வளர்ப்புத் தொழிலில் ஈடுபட்டுள்ளார்.
தினந்தோறும் பன்றிகளை மேய்ச்சலுக்கு அனுப்புவது வழக்கம். அதே போல் இன்று காலையும் பன்றிகளை மேய்ச்சலுக்கு அனுப்பி உள்ளார்.
அப்துல் கலாம் நகர் என்ற பகுதியில் மின்கம்பி ஒன்று அறுந்து விழுந்துள்ளது. மேய்ச்சலுக்குச் சென்ற பன்றிகள் இந்த மின்கம்பியை மிதித்தன. இதில் முப்பத்தி ஐந்து பன்றிகள் பரிதாபமாக உயிரிழந்தன. இதுகுறித்து மதுராந்தகம் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: மதுரையில் 'டிரான்ஸ் கிச்சன்'- திருநங்கையர்களின் சாதனை முயற்சி