பொதுமக்களின் பங்களிப்புடன் சென்னையை தூய்மையாக பராமரிக்க ‘பிளாக்கிங்’ உடற்பயிற்சி முறையில் விழிப்புணர்வு ஏற்படுத்த ”சென்னை பிளாக்கிங் சாவால்-2019” என்ற புதிய முன்னெடுப்பை சென்னை மாநகராட்சி மேற்கொண்டுள்ளது.
இதுகுறித்து சென்னை மாநகர ஆணையர் பிரகாஷ் கூறுகையில், இந்த பிளாக்கிங் சவால் என்பது சீரான நடைபயிற்சி மேற்கொள்ளும்போது இடையிடையே நின்று, குனிந்து, உட்கார்ந்து கோணிப்பையில் குப்பையைச் சேகரிக்கும் ஒரு உடற்பயிற்சி முறையாகும். இது உடலுக்கு நல்ல உடற்பயிற்சியாகவும், முக்கியமாக ஓடுவது, நடப்பது போன்ற உடற்பயிற்சியாகவும் இருக்கும் எனவும் கூறினார்.
மேலும், இதில் ஆர்வமுள்ளவர்கள் ஜூலை 14 அன்று காலை 5.45 மணிக்கு முன்னதாக கலந்துகொள்ளலாம் எனவும் பெருநகர மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார். மேலும், இப்புதுமையான குப்பை அள்ளும் விழிப்புணர்வு பயிற்சி கடந்த 2016ஆம் ஆண்டு ஸ்வீடன் நாட்டில் முதன்முறையாக நடைமுறைபடுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.