அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி அதிமுக தொண்டர்களுக்கு கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளனர். அந்த அறிக்கையில்,
'அதிமுகவின் வளர்ச்சி கண்டு எதிர்க்கட்சிகள் பயந்துபோய், கருத்துக்கணிப்பு என்கிற பெயரில் அவர்களுக்கு சொந்தமான ஊடகங்கள் மூலம் நம்மை பலவீனப்படுத்த முயல்கின்றன. அவர்களின் இந்தச் செயல்களுக்கு நாம் ஒருபோதும் ஆட்பட்டுவிடக் கூடாது.
நம் கட்சி ஆலமர விருட்சம் போன்றது. நம்மை யார் பலவீனப்படுத்த நினைத்தாலும் நாம் அதற்கு இடம் கொடுத்துவிடக் கூடாது. தமிழ்நாட்டில் எய்ம்ஸ், அத்திக்கடவு-அவினாசி திட்டம் உள்ளிட்ட எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தியுள்ளோம்.
எனவே, கழகத்தின் அனைத்து நிலையில் உள்ளவர்களும், கண் துஞ்சாமல் தேர்தல் பணியாற்றி மக்களவைத் தேர்தல் மற்றும் சட்டப்பேரவை இடைத்தேர்தல்களின் வெற்றிபெற பாடுபட வேண்டும். அந்த வெற்றியை முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு காணிக்கையாக்க வேண்டும்' என வேண்டுகோள் விடுத்துள்ளனர்.