ETV Bharat / state

ப்ளஸ் டூ தேர்வு முடிவுகள் 19ஆம் தேதி வெளியீடு - அரசுத் தேர்வுத்துறை

ப்ளஸ் டூ தேர்வு முடிவுகள் 19ஆம் தேதி காலை 9.30 மணிக்கு வெளியீடு
author img

By

Published : Apr 16, 2019, 5:03 PM IST

Updated : Apr 16, 2019, 7:25 PM IST

2019-04-16 16:51:51

சென்னை: 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களின் தேர்வு முடிவுகள் 19ஆம் தேதி காலை 9.30 மணிக்கு இணையதளத்தில் வெளியிடப்படுகிறது என அரசுத் தேர்வுத்துறை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இது குறித்து அரசுத் தேர்வுத் துறை இயக்குநர் வசுந்தராதேவி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், 

2019  மார்ச் மாதம் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய பள்ளி பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்கள் மற்றும் தனித்தேர்வர்களின் தேர்வு முடிவுகள்  இம்மாதம் 19ஆம் தேதி காலை 9.30 மணிக்கு வெளியிடப்படுகிறது.

தேர்வர்கள் தங்களது பதிவு எண், பிறந்த தேதி, மாதம் மற்றும் வருடத்தைப் பதிவு செய்து, தேர்வு முடிவுகளை மதிப்பெண்களுடன்  கீழ்கண்ட இணையதளங்கள் மூலம் அறிந்து கொள்ளலாம்.

www.tnresults.nic.in
www.dge1.tn.nic.in
www.dge2.tn.nic.in

மேலும், பள்ளி மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளிகளிலும் மதிப்பெண்களுடன் கூடிய தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.  பள்ளி மாணவர்களுக்கு அவர்கள் பயின்ற பள்ளிகளில் சமர்ப்பித்த  உறுதிமொழிப் படிவத்தில் குறிப்பிட்டுள்ள செல்போன் எண்ணுக்கு குறுஞ்செய்தியாக தேர்வு முடிவு அனுப்பப்படும்.  

தனித்தேர்வர்களுக்கும் ஆன்லைனில்  விண்ணப்பிக்கும்போது வழங்கிய செல்போன்  எண்ணுக்கு தேர்வு முடிவுகள் குறுஞ்செய்தியாக அனுப்பப்படும்.

ஏப்ரல் 20ஆம் தேதி அன்று காலை 9 மணி முதல் 26ஆம் தேதி வரையிலான நாட்களில் தேர்வர்கள் தாங்கள் பயின்ற பள்ளி, தேர்வு எழுதிய தேர்வு மையத்தின் தலைமை ஆசிரியர் மூலமாக இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யப்பட்ட  மதிப்பெண் பட்டியலை பெற்றுக்கொள்ளலாம். 

பள்ளி மாணவர்கள், தனித்தேர்வர்கள் தங்களுக்கான மதிப்பெண் பட்டியலை பிறந்த தேதி, பதிவு எண் ஆகிய விவரங்களை அளித்து  www.dge.tn.nic.in என்ற இணையதளத்தில் தாங்களே பதிவிறக்கமும் செய்துகொள்ளலாம் 

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 
 
Intro:Body:

plus two exam result details announced

Conclusion:
Last Updated : Apr 16, 2019, 7:25 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.