தமிழ்நாடு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சாமி தரிசனம் செய்ய நேற்று திருப்பதிக்குச் சென்றார்.
அங்கு அவருக்கு கோயில் நிர்வாகம் சார்பில் மலர்கொத்து கொடுத்து வரவேற்பு அளிக்கப்பட்டது. இரவு திருமலையில் உள்ள விருந்தினர் மாளிகையில் தங்கினார். இதையடுத்து இன்று காலை சிறப்பு தரிசனம் மூலம் திருப்பதி ஏழுமலையான் சாமியை தரிசனம் செய்தார்.
பின்னர், ரங்க நாயக்கர் மண்டபத்தில் அவருக்கு தீர்த்தப் பிரசாதம் வழங்கப்பட்டது.