ETV Bharat / state

மருத்துவத்துறையில் தமிழகம்தான் டாப்பு - சி.விஜயபாஸ்கர்

புதுகை : இந்தியோவிலேயே மருத்துவத்துறையில் தமிழகம் முதலிடம் வகிக்கிறது. இனி வரும் காலங்களில் மேலை நாடுகளுக்கு இணையான வளர்ச்சியை பெறும் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சி. விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

தமிழகம்
author img

By

Published : Feb 9, 2019, 9:43 PM IST

புதுக்கோட்டையில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரியில் எக்ஸ்ரே, ஸ்கேன் எனப்படும் 'பல்துறை அகநோக்கிகளை' திறந்து வைத்த மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் செய்தியாளர்களை சந்தித்து பேட்டியளித்தார்.

செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது;

புதுகை அரசு மருத்துவக்கல்லூரியில் உள்ள அரசு மருத்துவமனையில் இரைப்பை பரிசோதனை, பெருங்குடல், பித்தப்பை, கணையம் உள்ளிட்ட பல்வேறு பரிசோதனைகள் மேற்கொள்ளும் வகையில் ரூ. 2.21 கோடி மதிப்பீட்டில் பல்துறை சார்ந்த 15 அகநோக்கிகள் திறந்து வைக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளன. இந்த ஆண்டு இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் தமிழகம் முழுவதும் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளுக்கு அதிநவீன உபகரணங்கள் வழங்கப்பட்டு வருகின்றன என்று தெரிவித்தார்.

இதையடுத்து, நேற்றையதினம் இந்தியாவிலேயே முதல் முறையாக சென்னை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கல்லீரல் மற்றும் பித்தப்பை நிலையத்தில் எம்.ஆர்.ஐ ஸ்கேன் எனப்படும் 'அதிநவீன கதிரியல் இடையிடு தொகுப்பகம்' திறந்து வைக்கப்பட்டது என்று கூறிய விஜயபாஸ்கர், மருத்துவத்துறைக்கு நடப்பாண்டில் பல கோடி ஒதுக்கப்பட்டுள்ள பட்ஜெட் கணக்கையும் தெரிவித்தார். இந்த ஆண்டு தமிழக சுகாதாரத்துறைக்கு ரூ.12, 563 கோடி ரூபாயும், உலக வங்கி நிதியின் கீழ் ரூ.2,645 கோடியும், ஜப்பான் நாட்டின் ஜெயிக்கா திட்டத்தின் கீழ் ரூ.1,645 கோடியும், மத்திய அரசின் நிதியாக ரூ.2,650 கோடியும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது எனக் கூறினார்.

சி.விஜயபாஸ்கர்
undefined

மேலும், இந்த வருடம் மருத்துவத்துறைக்கு ஒரு மகத்தான ஆண்டாக அமைந்துள்ளது. இதன்மூலம் இந்தியோவிலேயே மருத்துவத்துறையில் முதன்மை மாநிலமாக இருக்கும் தமிழக சுகாதாரத்துறை மேலை நாடுகளுக்கு இணையான வளர்ச்சியை பெறும். சுகாதாரத்துறையின் கீழ் 108 ஆம்புலன்ஸ் இருசக்கர வாகன ஆம்புலன்ஸ் கடற்கரை மணல் மற்றும் மலைகளில் செல்லக்கூடிய ஆம்புலன்ஸ் போன்றவை தற்போது பயன்பாட்டில் உள்ளன என்றும் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

இந்தியோவிலேயே மருத்துவத்துறையில் முதன்மை மாநிலமாக 
இருக்கும் தமிழக சுகாதாரத்துறை மேலை நாடுகளுக்கு இணையான 
வளர்ச்சியை பெறும்...
புதுக்கோட்டையில் புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரியில் பல்துறை அகநோக்கிகளை திறந்து pகளை திறந்து 
வைத்து மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அமைச்சர் 
சி.விஜயபாஸ்கர் பேட்டி,.. 

மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அவர்கள் தெரிவித்ததாவது.
புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தொடர்ந்து 
பல்வேறு புதிய மருத்துவ பிரிவுகள் தொடங்கப்பட்டு வருகிறது. அதனடிப்படையில் 
இன்றையதினம் அரசு மருத்துவக்கல்லூரியில் இரைப்பை பரிசோதனைஇ 
பெருங்குடல்இ பித்தப்பைஇ கணையம் உள்ளிட்ட பல்வேறு பரிசோதனைகள் 
மேற்கொள்ளும் வகையில் ரூ.2.21 கோடி மதிப்பீட்டில் பல்துறை சார்ந்த 15 
அகநோக்கிகள் திறந்து வைக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு 
கொண்டுவரப்பட்டுள்ளது. 
தமிழகம் முழுவதும் இந்த ஆண்டு இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் 
இல்லாத வகையில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளுக்கு அதிநவீன 
உபகரணங்கள் வழங்கப்பட்டு வருகிறது. இதன்மூலம் சி.டி ஸ்கேன்இ எம்.ஆர்.ஐ 
ஸ்கேன்இ புற்றுநோய் கண்டறியும் கருவிஇ மேலும் நேற்றையதினம் இந்தியாவிலேயே 
முதல் முறையாக சென்னை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில்
கல்லீரல் மற்றும் பித்தப்பை நிலையத்தில் அதிநவீன கதிரியல் இடையிடு 
தொகுப்பகம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இதுபோன்று அதிநவீன உபகரணங்கள் மூலம் அரசு மருத்துவமனைகளில் 
எவ்வித நோயும் ஆரம்பக்கட்டத்திலேயே கண்டறியும் வாய்ப்பு உருகிறது. 
இதன்மூலம் ஆரம்ப நிலைகளிலேயே நோயினை குணப்படுத்தி நோயாளிகள் 
உயிரை காப்பாற்றுவதை உறுதி செய்து தமிழக சுகாதாரத்துறை சிறப்புடன் 
செயலாற்றி வருகிறது. 
இந்த ஆண்டு தமிழக சுகாதாரத்துறைக்கு பட்ஜெட்டில் ரூ.12இ563 கோடி 
ரூபாய் நிதியொதிக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும் உலக வங்கி நிதியின் கீழ் 
ரூ.2இ645 கோடியும்இ ஜப்பான் நாட்டின் ஜெயிக்கா திட்டத்தின் கீழ் ரூ.1இ645 
கோடியும்இ மத்திய அரசின் நிதியாக ரூ.2இ650 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டு 
இந்த ஆண்டு மருத்துவத்துறைக்கு ஒரு மகத்தான ஆண்டாக அமைந்துள்ளது. 
இதன்மூலம் இந்தியோவிலேயே மருத்துவத்துறையில் முதன்மை மாநிலமாக 
இருக்கும் தமிழக சுகாதாரத்துறை மேலை நாடுகளுக்கு இணையான 
வளர்ச்சியை பெறும். 
சுகாதாரத்துறையின் கீழ் 108 ஆம்புலன்ஸ்இ இருசக்கர வாகன ஆம்புலன்ஸ்இ 
கடற்கரை மணல் மற்றும் மலைகளில் செல்லக்கூடிய ஆம்புலன்ஸ் போன்றவை 
தற்போது பயன்பாட்டில் உள்ளது. தற்போது வெள்ளத்தில் செல்லும் வகையில் 
சோதனை முயற்சியாக ஆம்புலன்ஸ் தயாரிக்க சென்னை ஐ.ஐ.டி நிறுவனத்திற்கு 
நிதியொதுக்கீடு செய்யப்பட்டு தற்பொழுது ஆம்புலன்ஸ் தயாரிக்கும் பணி 
நடைபெற்று வருகிறது. இந்த ஆம்புலன்ஸ் பயன்பாட்டிற்கு வரும் பொழுது 
இயற்கை பேரிடர் காலங்களில் பொதுமக்களுக்கு மிகுந்த பயனுள்ளதாக 
அமையும். இவ்வாறு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர்  திரு.சி.விஜயபாஸ்கர் அவர்கள் தெரிவித்தார்.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.