ETV Bharat / state

ஐந்து மாதம் கூட தாங்கல! மழை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட பாலம் - பொதுப்பணித்துறை விளக்கம்! - TIRUVANNAMALAI NEW FLYOVER DAMAGE

ஃபெஞ்சல் புயல் காரணமாக திருவண்ணாமலையில் பெய்த கனமழையில் புதிதாக திறக்கப்பட்ட ஐந்து மாதங்களே ஆன மேம்பாலம் வெள்ளத்தால் உடைந்து இழுத்து செல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இதுகுறித்து பொதுப்பணித்துறை விளக்கம் அளித்துள்ளது.

வெள்ளத்தால் உடைந்த மேம்பாலம்
வெள்ளத்தால் உடைந்த மேம்பாலம் (ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 4, 2024, 10:53 AM IST

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட அகரம் பள்ளிப்பட்டு தொண்டமானூர் இடையே சுமார் 16 கோடி மதிப்பீட்டில் மேம்பாலம் கட்டப்பட்டது. இந்த மேம்பாலத்தை கடந்த ஐந்து மாதங்களுக்கு முன்பு பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு திறந்து வைத்து, பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வந்தார்.

இந்நிலையில், ஃபெஞ்சல் புயல் காரணமாக செங்கம், ஊத்தங்கரை, கிருஷ்ணகிரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பெய்த கனமழையால் தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதையடுத்து சாத்தனூர் அணைக்கு விநாடிக்கு நீர்வரத்து 1,68,000 கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட்டது. பின், அணையின் பாதுகாப்பு கருதி சாத்தனூர் அணைக்கு வரும் நீரை அப்படியே உபரிநீராக வெளியேற்றப்பட்டதால் தென்பெண்ணை ஆற்றில் அதிக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு அகரம்பள்ளிப்பட்டு தொண்டைமானூர் இடையே புதிதாக கட்டப்பட்ட மேம்பாலம் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டதால் அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

மேம்பாலத்தை திறந்து வைத்த அமைச்சர் எ.வ.வேலு
மேம்பாலத்தை திறந்து வைத்த அமைச்சர் எ.வ.வேலு (ETV Bharat Tamil Nadu)

தற்போது இந்த சம்பவம் குறித்து பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத்துறை சார்பில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில், “அகரம்பள்ளிப்பட்டு, தொண்டமானூர் கிராமங்களை இணைக்கும் வகையில் தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே ரூ.15.90 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட உயர்மட்ட பாலம் தற்போது 30.11.2024 மற்றும் 1.12.2024 ஆகிய நாட்களில் ஃபெஞ்சல் புயலால் பெய்த வரலாறு காணாத மழையின் காரணத்தினால் ஏற்பட்ட பெரும் வெள்ளபெருக்கினால் சேதமடைந்து.

வெள்ளத்தால் உடைந்த மேம்பாலம்
வெள்ளத்தால் உடைந்த மேம்பாலம் (ETV Bharat Tamil Nadu)

இதையும் படிங்க: ஏழு பேரின் உயிரை பலி கொண்ட நிலச்சரிவு: “திருவண்ணாமலை அடிவார பகுதி வாழ்வதற்கு பாதுகாப்பான இடமா?”- ஐஐடி பேராசிரியர் விளக்கம்!

இந்த பாலத்தின் நீளம் - 250 மீ (20.8 மீ நீளத்தில் 12 கண்கள்), அகலம் – 12 மீ கொண்டதாக இருக்கிறது. சாத்தனூர் அணையில் இருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவு, வேகம் ஆகியவற்றை கணக்கில் கொண்டு, ஆற்றுபடுக்கையில் இருந்து வடிவமைக்கப்பட்ட நீர்வழியின் உயரம் - 5 மீட்டர் ஆகவும், பாலத்தின் உயரம் -7 மீட்டர் ஆகவும் நீரியியல் கணக்கீட்டின்படி பாலத்தின் நீர்வெளியேற்றம் (Design Discharge) 54,417 கன அடி ஆகவும், திறந்த வெளி அடித்தளம் மற்றும் 11 வட்ட வடிவ தூண்கள் அமைத்து பாலம் நல்ல தரத்துடன் கட்டிமுடிக்கப்பட்டது.

இந்நிலையில் ஃபெஞ்சல் புயல் காரணமாக வரலாறு காணாத வகையில் 450 மி.மீ மேல் பெய்த கன மழையினால், சாத்தனூர் அணையிலிருந்து வழக்கமாக வெளியேற்றப்படும் உபரி நீரின் அளவை விட நான்கு மடங்கு அதிகமாக, அதாவது 2,00,000 கனஅடிக்கு மேல் அணையின் பாதுகாப்பு கருதி தண்ணீர் திறந்துவிடப்பட்டது.

மேலும் இப்பாலமானது, அணையிலிருந்து 24 கி.மீ, தொலைவில் உள்ளதால், தொடர் மழையினால் பாம்பாறு மற்றும் நீர்பிடிப்பு பகுதிகளில் ஏற்பட்ட வெள்ளநீரும், இணைந்து இப்பாலத்தில் வெள்ள பெருக்கு ஏற்பட்டு பாலத்தின் மேற்பரப்பிற்கு மேல் சுமார் 4 மீட்டர் உயரத்திற்கு நீரின் வேகம் அதிகரித்து ஓடியதால் இப்பாலம் பெரும் சேதமடைந்து போக்குவரத்து தடைப்பட்டுள்ளது. இந்த சேதமடைந்த பகுதியை ஆய்வு செய்து மீண்டும் பாலம் சரி செய்ய உரிய நடவடிக்கை எடுக்கப்படும்,” என குறிப்பிட்டிருந்தனர்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.