சென்னை: பிரபல சின்னத்திரை நடிகர் யுவன்ராஜ் நேத்ரன் (47) நேற்று உயிரிழந்தார். சன் டிவியில் ஒளிபரப்பான மருதாணி, மகாலட்சுமி சிவமயம் , விஜய் டிவியில் பாக்யலட்சுமி உட்பட பல மெகா தொடர்களில் நடித்து பிரபலமானவர் சின்னத்திரை நடிகர் யுவன்ராஜ் நேத்ரன். சின்னத்திரையில் 25 வருட கால அனுபவமுள்ளவர். நேத்ரன் பாக்கியலஷ்மி, பொன்னி ஆகிய சீரியல்களில் நடித்துள்ளார். அது மட்டுமின்றி பாய்ஸ் VS கேர்ல்ஸ் சீசன் 2, சூப்பர் குடும்பம் ஆகிய ரியாலிட்டி ஷோக்களில் வெற்றி பெற்றுள்ளார்.
இவரது மனைவி தீபாவும் சின்னத்திரையில் நடித்து வருகிறார். இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். ஒரு மகள் 'சிங்கப்பெண்ணே’ என்ற டிவி தொடரில் நடித்து வருகிறார். நேத்ரன் நடன கலைஞராகவும் அறியப்படுபவர். இந்நிலையில் இவர் கடந்த ஆறு மாதத்திற்கு முன்பாக நுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அதுகுறித்து நடிகர் யுவன்ராஜ் நேத்ரன் மகள் தனது சமூக வலைதள பக்கத்தில் உருக்கமாக வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார்.
இதையும் படிங்க: “Pushpa 3 Rampage” தயாராகும் மூன்றாம் பாகம்; அல்லு அர்ஜுனுடன் நடிக்கிறாரா விஜய் தேவர்கொண்டா?
இதனைத்தொடர்ந்து சென்னை, வளசரவாக்கம் பகுதியில் வசித்து வரும் நடிகர் நேத்ரன் தொடர்ந்து புற்று நோய்க்கான சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இவரது மறைவு சின்னத்திரை உலகில் சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், சின்னத்திரை பிரபலங்கள் பலரும் சமூக வலைதளங்களில் இரங்கலை தெரிவித்து வருகின்றனர். இவரது இறுதிச் சடங்குகள் அவரது வீட்டில் நடைபெற உள்ளது. நேத்ரனின் மறைவு ரசிகர்களுக்கு மிகப் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.