ETV Bharat / state

'முதுகலை மருத்துவப் படிப்பில் சேர்வதற்கான சேவை மதிப்பெண் விரைவில் அறிவிக்கப்படும்' - நீட் தேர்வு

சென்னை: முதுகலை மருத்துவப் படிப்பில் சேர்வதற்கான சேவை மதிப்பெண் விரைவில் அறிவிக்கப்படுமென மருத்துவக்கல்வி இயக்குநர் எட்வின் ஜோ தெரிவித்துள்ளார்.

PGMS
author img

By

Published : Feb 6, 2019, 1:08 PM IST

முதுகலை மருத்துவப் படிப்பில் சேர்வதற்கான நீட் நுழைவுத் தேர்வினை இந்தியா முழுவதும் உள்ள 167 மையங்களில் ஒரு லட்சத்து 43 ஆயிரத்து 148 எம்பிபிஎஸ் முடித்த மருத்துவர்கள் எழுதினர். அதில் 79 ஆயிரத்து 633 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

இவர்களில் தமிழகத்திலிருந்து தேர்வெழுதிய 17 ஆயிரத்து 67 பேரில் 11 ஆயிரத்து 121 பேர் முதுகலை மருத்துவப் படிப்பிற்கு தேர்ச்சி பெற்றுள்ளனர். அடுத்ததாக கர்நாடகவில் தேர்வெழுதிய 15 ஆயிரத்து 616 பேரில் ஒன்பதாயிரத்து 219 பேர் தகுதி பெற்றுள்ளனர்.

முதுகலை மருத்துவப் படிப்பிற்கான தேர்வு எழுதியவர்களிலும், தகுதி பெற்றவர்களிலும் தமிழகம் முதலிடத்தில் உள்ளது.

முதுகலை மருத்துப் படிப்பிற்கான கட்-ஆப் மதிப்பெண் 1700. தகுதி மதிப்பெண்ணாக பொதுப்பிரிவினருக்கு 340, எஸ்.சி. எஸ்.டி. பிரிவினருக்கு 295 மதிப்பெண்கள், அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கு கட்-ஆப் மதிப்பெண் 317 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து மருத்துவக்கல்வி இயக்குநர் எட்வின் ஜோ செய்தியாளர்களிடம் கூறியதாவது:

2019-ம் ஆண்டு தமிழகத்தில் முதுகலை மருத்துவப் படிப்பில் 1,306 இடங்கள் உள்ளன. அவற்றில் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு அளிக்கப்பட்ட இடங்கள் போக மீதமுள்ள 708 இடங்களில் தமிழக மாணவர்கள் சேர்க்கப்படுவார்கள்.

முதுகலை மருத்துவப் படிப்பில் சேருவதற்கான நீட் தேர்வில் 2019-ம் ஆண்டில் அதிக அளவிலான மாணவர்கள் தமிழகத்திலிருந்து நிறைய மதிப்பெண்கள் பெற்று தேர்வாகி உள்ளனர்.

அதனால் அவர்கள் வெளிமாநிலங்களில் உள்ள சிறந்த மருத்துவக் கல்லுாரிகளில் இடங்களைத் தேர்வு செய்ய வாய்ப்புகள் அதிகம்.

முன்பு வெளிமாநிலத்தைச் சேர்ந்த மாணவர்கள் தமிழகத்திலுள்ள 30% இடங்களைக் கலந்தாய்வின் மூலம் பெற்றுவந்தனர்.

undefined

ஆனால், தற்போது தமிழக மாணவர்கள் அதிக மதிப்பெண்கள் பெற்று மாநிலத்தில் உள்ள முதுநிலை மருத்துவப் படிப்பிற்கான இடங்களை தேர்வு செய்ய உள்ளனர். இதற்குக் காரணம் தமிழகத்தில் எம்பிபிஎஸ் படிப்பில் தரம் உயர்ந்துள்ளது.

இந்த ஆண்டு அதிக அளவில் மதிப்பெண்கள் பெற்று மாணவர்கள் வெளிமாநிலங்களில் உள்ள இடங்களை பெறுவது போல், வரும் ஆண்டில் அகில இந்திய அளவில் அதிக அளவில் தேர்ச்சி பெற்று அனைத்து இடங்களையும் தேர்வு செய்ய வாய்ப்புகள் அதிகமாக உள்ளது.

அகில இந்திய அளவில் சுமார் 25 ஆயிரம் முதுகலை மருத்துவப் படிப்பு இடங்கள் உள்ளன. தமிழகத்திற்கு இந்த ஆண்டு 56 இடங்களுக்கு அனுமதி பெறப்பட்டுள்ளது. மேலும் 50 இடங்களுக்கு உரிய அனுமதி வரவேண்டியுள்ளது.

அதேபோல் கிராமப்புறங்களில் சேவையாற்றும் அரசு மருத்துவர்கள் கூறிய சேவை மதிப்பெண்கள் வழங்குவது குறித்து நீதிபதி செல்வம் இறுதிகட்டப் பணிகளை முடித்து விட்டார். விரைவில் சேவை மதிப்பெண்கள் குறித்த அறிவிப்பு வெளியாகும்.

அகில இந்திய அளவில் மருத்துவப் படிப்பிற்கான கலந்தாய்வு முடிந்த பின்னர், தமிழகத்தில் முதுகலை மருத்துவப் படிப்பிற்கான கலந்தாய்வு நடத்தப்படும் என அவர் தெரிவித்தார்.

Intro:முதுகலை மருத்துவ படிப்பு சேர்வதற்கான
சேவை மதிப்பெண் விரைவில் அறிவிக்கப்படும்
மருத்துவக்கல்வி இயக்குனர் தகவல்

Body:சென்னை,
முதுகலை மருத்துவ படிப்பு சேர்வதற்கான
சேவை விரைவில் அறிவிக்கப்படும் என
மருத்துவக்கல்வி இயக்குனர் எட்வின் ஜோ தெரிவித்தார்.
முதுகலை மருத்துவ படிப்பில் சேருவதற்கான நீட் நுழைவுத் தேர்வினை இந்தியா முழுவதும் உள்ள 167 மையங்களில் ஒரு லட்சத்து 43 ஆயிரத்து 148 எம்பிபிஎஸ் முடித்த மருத்துவர்கள் எழுதினர். அவர்களுக்கான தேர்வு முடிவு பிப்ரவரி 1ம் தேதி வெளியிடப்பட்டது. அதில் 79 ஆயிரத்து 633 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
இவர்களில் தமிழகத்திலிருந்து தேர்வெழுதிய 17 ஆயிரத்து 67 இளைஞர்கள் மருத்துவர்களில் 11 ஆயிரத்து 121 மருத்துவர்கள் தகுதி பெற்றுள்ளனர். அடுத்ததாக கர்நாடகாவிலிருந்து தேர்வு எழுதிய 15 ஆயிரத்து 616 பேரில் 9 ஆயிரத்து 219 பேர் தகுதி பெற்றுள்ளனர்.
முதுகலை மருத்துவ படிப்பிற்கான தேர்வு எழுதியவர்களிலும், தகுதி பெற்றவர்களிலும் முதலிடத்தில் தமிழகம் உள்ளது.
முதுகலை மருத்துவ படிப்புக்கான கட் ஆப் மதிப்பெண் 1700 தகுதி பணிப்பெண்ணாக பொதுப்பிரிவினருக்கு 340, எஸ்சி எஸ்டி ஓபிசி ஆகியோருக்கு 295 மதிப்பெண்களும், அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கு கட்-ஆப் மதிப்பெண் 317 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து மருத்துவ கல்வி இயக்குனர் எட்வின் ஜோ செய்தியாளர்களிடம் கூறியதாவது, 2019-ம் ஆண்டு தமிழகத்தில் முதுகலை படிப்பில் 1306 இடங்கள் உள்ளன. அவற்றில் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு அளிக்கப்பட்ட இடங்கள் போக மீதமுள்ள 708 இடங்களில் தமிழக மாணவர்கள் சேர்க்கப்படுவார்கள்.

முதுகலை மருத்துவ படிப்பில் சேருவதற்கான நீட் தேர்வில் 2019 ம் ஆண்டில் அதிக அளவிலான மாணவர்கள் தமிழகத்திலிருந்து நிறைய மதிப்பெண்கள் பெற்று தேர்வாகி உள்ளனர். அதனால் அவர்கள் வெளி மாநிலங்களில் உள்ள சிறந்த மருத்துவக் கல்லூரிகளில் இடங்களை தேர்வு செய்ய வாய்ப்புகள் அதிகம்.
முன்பு வெளிமாநிலத்தைச் சேர்ந்த மாணவர்கள் தமிழகத்திலுள்ள 30% இடங்களை கலந்தாய்வின் மூலம் எடுத்து வந்தனர். ஆனால் தற்போது தமிழக மாணவர்கள் அதிக மதிப்பெண்கள் பெற்று மாநிலத்தில் உள்ள முதுநிலை மருத்துவப் படிப்பு இடங்களை தேர்வு செய்ய உள்ளனர். இதற்கு காரணம் தமிழகத்தில் எம்பிபிஎஸ் படிப்பில் தரம் உயர்ந்துள்ளது.
இந்த ஆண்டு அதிக அளவில் மதிப்பெண்கள் பெற்று மாணவர்கள் வெளிமாநிலங்களில் உள்ள இடங்களை செய்வது போல், வரும் ஆண்டில் அகில இந்திய அளவில் அதிக அளவில் தேர்ச்சி பெற்ற அனைத்து இடங்களையும் தேர்வு செய்ய வாய்ப்புகள் அதிகமாக உள்ளது.
அகில இந்திய அளவில் சுமார் 25 ஆயிரம் முதுகலை மருத்துவ படிப்பு இடங்கள் உள்ளன தமிழகத்திற்கு இந்த ஆண்டு 56 இடங்களுக்கு அனுமதி பெறப்பட்டுள்ளது மேலும் 50 இடங்களுக்கு உரிய அனுமதி வரவேண்டியுள்ளது அதேபோல் கிராமப்புறங்களில் சேவையாற்றும் அரசு மருத்துவர்கள் கூறிய சேவை மதிப்பெண்கள் வழங்குவது குறித்து நீதிபதி செல்வம் இறுதிகட்ட பணிகளை முடித்து விட்டார் விரைவில் சேவை மதிப்பெண்கள் குறித்த அறிவிப்பு வெளியாகும். அகில இந்திய அளவில் மருத்துவ படிப்பிற்கான கலந்தாய்வு முடிந்த பின்னர் தமிழகத்தில் முதுகலை மருத்துவ படிப்பிற்கான கலந்தாய்வு நடத்தப்படும் என தெரிவித்தார்.
,

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.