அரியலூர் மாவட்டம் கொள்ளிடம் ஆற்றுப்பகுதியில் சட்டவிரோதமாக சாராயம் காய்ச்சிய சுரேஷ், கலியமூர்த்தி, சுப்பிரமணியன், கந்தசாமி ஆகியோரைக் காவல் துறையினர் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 400 லிட்டர் சாராய ஊறல்களைக் கைப்பற்றி அழித்தனர். இதேபோல் ஆண்டிமடம் அருகே குரவன்குட்டை என்ற இடத்தில் டாஸ்மாக் மதுபானங்களை சட்டவிரோதமாக பதுக்கி வைத்து விற்பனை செய்த ரமேஷ், சுப்புராஜ் ஆகியோரையும் கைது செய்த காவல் துறையினர், அவர்களிடமிருந்து 837 மதுபாட்டில்களைப் பறிமுதல் செய்தனர். பின்பு, கைது செய்யப்பட்ட அனைவரும் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்நிலையில், சட்டவிரோதமாக மதுபானம் காய்ச்சி கைதுசெய்யப்பட்ட அனைவரையும் குண்டர் சட்டத்தில் அடைக்க மாவட்டக் காவல் துறைக் கண்காணிப்பாளர் ஸ்ரீனிவாசன் பரிந்துரையின்பேரில், மாவட்ட ஆட்சியர் ரத்னா உத்திரவிட்டுள்ளார். கடந்த ஒரு மாதத்தில் அரியலூரில் சட்டவிரோதமாக மது தயாரிப்பு மற்றும் விற்பனையில் ஈடுபட்ட 33 பேர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் பார்க்க: கள்ளச்சாராயம் விற்றவர் கைது: 20 லிட்டர் சாராய ஊறல் அழிப்பு!