அரியலூர் மாவட்டம், எலந்தங்குழி கிராமத்தைச் சேர்ந்த விக்னேஷ் என்ற மாணவர் நீட் தேர்வு குறித்த அச்சம் காரணமாக மன உளைச்சலுக்கு ஆளாகி கடந்த 9ஆம் தேதி தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
இதனையடுத்து தற்கொலை செய்து கொண்ட மாணவர் விக்னேஷின் குடும்பத்திற்கு பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் 10 லட்சம் ரூபாய் நிதி வழங்கப்படும் எனக் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் அறிவித்திருந்தார்.
இந்நிலையில், பாமகவின் மாநில துணை பொதுச்செயலாளர் திருமாவளவன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள், விக்னேஷின் பெற்றோரை சந்தித்து 10 லட்சம் ரூபாய் நிதியை வழங்கினார். தொடர்ந்து விக்னேஷின் திருவுருவப் படத்திற்கு மலர் தூவி, அஞ்சலி செலுத்தினர்.
இதையும் படிங்க : என் விருப்ப ஓய்வுக்கும் சுஷாந்த் வழக்குக்கும் எந்தத் தொடர்பும் இல்லை - முன்னாள் டிஜிபி பாண்டே