ETV Bharat / state

வீடுகளை விற்று சுபாஷுக்கு நன்கொடை வழங்கிய தியாகி - இலவச பட்டா கேட்டு அலையும் வாரிசு

author img

By

Published : Dec 29, 2022, 3:14 PM IST

Updated : Dec 29, 2022, 3:46 PM IST

குடியிருந்த இரண்டு வீடுகளை விற்று நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் இந்திய தேசிய ராணுவத்துக்கு நிதி வழங்கிய குடும்பத்தினரின் வாரிசு இலவச வீட்டுமனை பட்டா கேட்டு அலையும் அவலம் அரியலூர் மாவட்டத்தில் அரங்கேறியுள்ளது.

Etv Bharatவீடுகளை விற்று நன்கொடை வழங்கிய தியாகி -இலவச வீட்டு மனை கேட்டு அலையும் வாரிசு

அரியலூர்: ஒருங்கிணைந்த திருச்சி மாவட்டம் செந்துறை கிராமத்தை சேர்ந்தவர், ராமசாமி. கடந்த 1942ஆம் ஆண்டு நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் இந்திய தேசிய ராணுவத்தின் செயல்பாடுகளால் கவரப்பட்ட இவர், தனக்கு சொந்தமான இரண்டு வீடுகளை விற்று அதில் கிடைத்த பணத்தை எடுத்துக்கொண்டு நேதாஜி சுபாஷ் சந்திர போஸை சந்தித்து, அவரிடம் வீடு விற்ற பணத்தை இந்திய தேசிய ராணுவத்துக்கு நன்கொடையாக வழங்கி தன்னையும் ராணுவ வீரனாக இணைத்துக் கொண்டார்.

இவரது மனைவி ஜக்குபாய் மற்றும் மகன் தீனதயாளன் ஆகியோர் அதே பகுதியில் குடிசை வீடு அமைத்து தங்கினர். நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் இந்திய தேசிய ராணுவத்தில் ராமசாமி இணைந்ததால் பிரிட்டிஷ் அரசின் கடுமையான நடவடிக்கைக்கு அவர் உட்படுத்தப்பட்டார். சிறைவாசமும் அனுபவித்தார்.

தொடர்ந்து நாடு சுதந்திரம் அடைந்த பிறகு சொந்த ஊரான செந்துறைக்கு திரும்பினார். குடிசை வீட்டிலேயே காலம் தள்ளியவர் கடந்த 1978ஆம் ஆண்டு காலமானார். தேசிய ராணுவத்துக்கு வீடுகளை விற்று நிதி கொடுத்துவிட்டு, தங்க இடமில்லாமல் குடிசை வீட்டில் வசித்த இவரது மனைவி ஜக்குபாய் தங்களுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா அல்லது இலவச வீடு போன்ற ஏதாவது ஒரு நல திட்டங்களை செய்து தருமாறு கோரி ராமசாமியின் சான்றிதழ்களோடு ஆட்சித் தலைவர்களிடம் முறையிட்டார்.

திருச்சி மாவட்டத்திலிருந்து செந்துறை என்ற கிராமம் பின்னர் பெரம்பலூர் மாவட்ட எல்லைக்கு மாறியும், தற்போது அரியலூர் மாவட்டத்திலும் உள்ளது. கடந்த பல ஆண்டுகளாக மனு கொடுத்து, மனு கொடுத்து, போராடி பார்த்த ஜக்குபாய் 2018ல் காலமானார். இந்த தம்பதியின் ஒரே மகனான தீனதயாளன் திருமணமே செய்து கொள்ளாமல் வாழ்க்கையை நடத்தி வருகிறார். தற்போது அவருக்கு வயது 64.

இந்த நிலைமையிலும் சாலை ஓர குடிசை வீட்டிலேயே தங்கி உள்ள அவரும் மனு கொடுக்கும் முயற்சியை விடாமல் மேற்கொண்டே வருகிறார். அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு ஒன்றை கொடுத்த தீனதயாளன் நம்மிடம் பேசுகையில், ' தனது தந்தை இந்திய தேசிய ராணுவத்துக்கு வீட்டை விற்று நன்கொடை அளித்தார். இன்று நாங்கள் வீடு வசதி இல்லாமல் தவிக்கிறோம்.

இது குறித்து பல ஆண்டுகளாக நாங்கள் கொடுத்த மனுக்கள் எல்லாமும் செவிடன் காதில் ஊதிய சங்காகவே இருக்கிறது. எந்தவித நிவாரணமும் அரசு தரப்பில் செய்து தரப்படவில்லை. எனவே, இலவச வீட்டு மனை பட்டா வழங்க வேண்டும்’ என்று கோரி இருந்தார்.

மேலும் தற்போது பெயின்டர் வேலைக்கு கூலி வேலைக்குச் சென்று வருவதாகவும் இதில் கிடைக்கும் சொற்ப வருமானத்தில் குடும்பம் நடத்த இயலவில்லை என்றும் குறிப்பிட்டிருந்த தீனதயாளன் தனக்கு ஏதாவது உதவி செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.

தற்போது வரை அரசு உதவி கிடைக்காமல் அலையும் நிலையையே தொடர்ந்து அவர் சந்தித்து வருகிறார். இவரது மனுக்கள் குறித்து உடையார்பாளையம் ஆர்.டி.ஓ ,பரிமளம் கூறும்போது, மனு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க:அரசாணை 149ஐ ரத்து செய்துவிட்டு தகுதி தேர்வு அடிப்படையில் ஆசிரியர் நியமனம்: அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்!

Last Updated : Dec 29, 2022, 3:46 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.