அரியலூர் அரசு சிமென்ட் ஆலைக்கு, ஆனந்தவாடி கிராமத்தில் 1982-ஆம் ஆண்டு 161 விவசாயிகளிடமிருந்து 270 ஏக்கர் நிலம், ஏக்கர் ஒன்றுக்கு ரூபாய் 2,500 வீதம் வாங்கப்பட்டது.
இந்நிலையில் இதுநாள்வரை நிலம் கொடுத்த விவசாயிகளுக்கு நிரந்தர வேலை வழங்கவில்லை. இதனையடுத்து தற்போது விரிவாக்கம் செய்யப்பட்டுள்ள அரசு சிமென்ட் ஆலைகள் விவசாயிகளில் தகுதியுள்ளவர்களுக்கு வேலை வழங்க வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்து வந்தனர். ஆனால் இன்று முதல் கையப்படுத்தப்பட்ட நிலத்தில் சுண்ணாம்புக்கல் எடுக்க ஆலை நிர்வாகம் திட்டமிட்டிருந்தது.
இதனை அறிந்த ஊர் மக்கள் தங்களுக்கு நிரந்தர வேலை வழங்க வேண்டும் எனவும், அதுவரை சுண்ணாம்புக்கல் எடுக்க விட மாட்டோம் எனவும் கிராமத்தின் மையப்பகுதியில் கூடி எதிர்ப்புத் தெரிவித்தனர்.
தகவலறிந்து அவ்விடம் வந்த உடையார்பாளையம் வருவாய் கோட்டாட்சியர் பூங்கோதை, மூன்று டிஎஸ்பி, நான்கு காவல் ஆய்வாளர், மேலும் நூற்றுக்கும் மேற்பட்ட காவலர்கள் அங்கு குவிக்கப்பட்டனர்.
இதையும் படிங்க: தகுந்த இடைவெளியைப் பின்பற்றாத அரசுப் பேருந்துகள்!