அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி அருகே உள்ள வங்குடி கிராமத்திற்கு உரிய நியாயவிலைக் கடை நரசிங்கம்பாளையத்தில் 40 ஆண்டுகளாக செயல்பட்டுவருகிறது. வங்குடி கிராமத்திலிருந்து சுமார் மூன்று கிலோமீட்டர் தூரத்தில் உள்ள நரசிங்கபாளையம் சென்று பொருள்கள் வாங்கி வர வேண்டி உள்ளது.
இந்நிலையில் நியாயவிலைக் கடையை தங்கள் கிராமத்தில் அமைக்க வேண்டி வங்குடி பொதுமக்கள் பல காலமாக கோரிக்கைவைத்து வருகின்றனர்.
சென்ற மாதம் கரோனா தடுப்பு நடவடிக்கையின் காரணமாக சேவை மைய கட்டடத்தில் பொருள்கள் விநியோகம் செய்யப்பட்டுவந்த நிலையில் தற்போது மீண்டும் நரசிங்கம்பாளையத்தில் பொருள்கள் விநியோகம் செய்யப்படுகிறது.
இதனைக் கண்டித்து பொதுமக்கள் தங்கள் கிராமத்தில் நியாயவிலைக் கடை அமைக்க வேண்டிகண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையும் படிங்க: லடாக் வன்முறை: தயார் நிலையில் இந்திய போர் விமானங்கள்!