ETV Bharat / state

12th Exam: தமிழில் சில கேள்விகள் கடினமாக இருந்தது! - அரியலூர் செய்திகள்

இன்று நடைபெற்ற 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வின் தமிழ் தாளில், சில கேள்விகள் கடினமாக இருந்ததாக மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.

12th Exam: தமிழில் சில கேள்விகள் கடினமாக இருந்தது!

author img

By

Published : Mar 13, 2023, 6:50 PM IST

அரியலூர்: மாநிலப் பாடத்திட்டத்தின் கீழ் 12ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கான பொதுத்தேர்வு இன்று (மார்ச் 13) தொடங்கி ஏப்ரல் 4 வரை நடைபெறுகிறது. இந்த பொதுத்தேர்வை 4 லட்சத்து 10 ஆயிரத்து 138 மாணவர்களும், 4 லட்சத்து 41 ஆயிரத்து 164 மாணவிகளும், மூன்றாம் பாலினத்தைச் சேர்ந்த ஒருவர் மற்றும் 23 ஆயிரத்து 747 தனித்தேர்வர்கள் என மொத்தமாக 8 லட்சத்து 75 ஆயிரத்து 50 பேர் எழுதுகின்றனர்.

இதற்காக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியை சேர்த்து 3 ஆயிரத்து 225 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் 46 ஆயிரத்து 870 தேர்வு அறைக் கண்காணிப்பாளர்களும், 4 ஆயிரத்து 235 பறக்கும் படை மற்றும் நிலையான படை உள்பட 4 படைகளைச் சேர்ந்த கண்காணிப்பாளர்களும் பொதுத் தேர்வு பணியில் ஈடுபட்டுள்ளனர். அந்த வகையில் அரியலூர் மாவட்டத்தில் 90 பள்ளிகளைச் சேர்ந்த மொத்தம் 9,152 மாணவ, மாணவிகள் 44 தேர்வு மையங்களில் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வை எழுதுகின்றனர்.

இந்த நிலையில் இன்று தமிழ் தாள் தேர்வு நடைபெற்றது. காலை 10 மணிக்கு தொடங்கிய இந்த தேர்வு பிற்பகல் 1.15 மணி வரை நடைபெற்றது. இதனையடுத்து அரியலூர் மாவட்டத்தில் தேர்வெழுதிய மாணவிகள் கூறுகையில், “தமிழ் தாள் எளிமையாக இருந்தது. சில கேள்விகள் மிகவும் எளிமையாக இருந்தது. ஆனால், சில பகுதிகளில் கேட்கப்பட்ட கேள்விகள் சற்று கடினமாக இருந்தது” என தெரிவித்தனர்.

மேலும் அரியலூர் மாவட்டத்தில் நாளை (மார்ச் 14) தொடங்க உள்ள 11ஆம் வகுப்பு பொதுத் தேர்வை 90 பள்ளிகளைச் சேர்ந்த மொத்தம் 8,370 மாணவ, மாணவிகள் 44 தேர்வு மையங்களில் தேர்வெழுத உள்ளனர். அதேபோல் வருகிற ஏப்ரல் 6ஆம் தேதி தொடங்க உள்ள 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வை மொத்தம் 10,085 பேர் 58 மையங்களில் தேர்வெழுத இருக்கின்றனர். மேலும் மாவட்டத்தில் 10, 11 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு பணி, ஆசிரியர்களுக்கு அவர்களது பள்ளிகள் குலுக்கல் முறையில் ஒதுக்கீடு செய்துள்ளது.

இதனிடையே இன்று தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் நடைபெற்ற 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வின் தமிழ் தேர்வை 50,674 மாணவ, மாணவிகள் எழுதவில்லை என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. மேலும் தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், திருச்சி ஆப்ட் மார்சல் ஆர்.சி. மேல்நிலைப்பள்ளியில் தேர்வு முடித்து விட்டு வெளியே வந்த மாணவர்களுடன் கலந்துரையாடினார். முன்னதாக காக்கி பேண்ட் மற்றும் வெள்ளை நிற சட்டை உடன் அதே பள்ளியில் தேர்வு முகாமை ஆய்வு செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: தமிழ் தேர்வு எப்படி.? 12ஆம் வகுப்பு மாணவிகள் கருத்து

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.