டோக்கியோ: ஒலிம்பிக்கின் 15ஆவது நாளான இன்று இந்திய வீரர், வீராங்கனைகள் ஆடவர் 50 கி.மீ. நடை பந்தயப்போட்டி, மகளிர் 20 கி.மீ. நடை பந்தயப்போட்டி, கோல்ஃப், மகளிர் ஹாக்கி, ஆடவர், மகளிர் மல்யுத்தம் உள்ளிட்டப் போட்டிகளில் பங்கேற்றனர்.
அதில், ஆடவர் மல்யுத்தம் 65 கிலோ எடைப்பிரிவில், இந்திய வீரரான பஜ்ரங் புனியா, கிர்கிஸ்தான் நாட்டின் அக்மதாலீவை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார். அதைத் தொடர்ந்து அவர் காலிறுதிப்போட்டியில், ஈரான் நாட்டு மல்யுத்த வீரரை மோர்டேஸாவை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறி அசத்தினார்.
அரையிறுதிப் போட்டியில் அஜர்பைஜான் நாட்டு வீரர் ஹஜியை எதிர்கொள்கிறார். அவர் பதக்கம் வெல்வார் என எதிர்பாக்கப்படுகிறது.
இதையும் படிங்க: ஒலிம்பிக் ஆடவர் மல்யுத்தம்: பஜ்ரங் புனியா காலிறுதிக்கு முன்னேற்றம்