டோக்கியோ: ஒலிம்பிக் தொடரின் ஆண்கள் வில்வித்தையில் ’ரவுண்ட் ஆஃப் 16’ போட்டிகள் நடைபெற்றன. இந்தச் சுற்றின் ஒரு போட்டியில் உலகின் முதல் நிலை வீரரான அமெரிக்கா நாட்டைச் சேர்ந்த பிராடி எலிசன், இந்தியாவின் பிரவின் ஜாதவ் உடன் மோதினார்.
பொய்த்த நம்பிக்கை!
இதற்கு முன்னர், ’ரவுண்ட் ஆஃப் 32’ இல் பிரவின், உலகின் இரண்டாம் நிலை வீரரான ரஷ்யாவின் கால்சனை வீழ்த்தி நம்பிக்கை அளித்திருந்தார். இருப்பினும், இந்த போட்டியில் தொடக்கத்தில் இருந்தே எலிசனின் கையே ஓங்கியிருந்தது. எலிசன், 28-27, 27-26, 26-23 என மொத்தமாக 6-0 என்ற நேர் செட்களில் பிரவினை வீழ்த்தி அடுத்தச் சுற்றுக்கு முன்னேறினார்.
-
#TeamIndia | #Tokyo2020 | #Archery
— Team India (@WeAreTeamIndia) July 28, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
Men's Individual 1/16 Eliminations Results
After earlier knocking out World No. 2, archer @pravinarcher goes down against World No. 1 Brady Ellison 0-6. Spirited effort champ! #RukengeNahi #EkIndiaTeamIndia #Cheer4India pic.twitter.com/m5DdlGJHAR
">#TeamIndia | #Tokyo2020 | #Archery
— Team India (@WeAreTeamIndia) July 28, 2021
Men's Individual 1/16 Eliminations Results
After earlier knocking out World No. 2, archer @pravinarcher goes down against World No. 1 Brady Ellison 0-6. Spirited effort champ! #RukengeNahi #EkIndiaTeamIndia #Cheer4India pic.twitter.com/m5DdlGJHAR#TeamIndia | #Tokyo2020 | #Archery
— Team India (@WeAreTeamIndia) July 28, 2021
Men's Individual 1/16 Eliminations Results
After earlier knocking out World No. 2, archer @pravinarcher goes down against World No. 1 Brady Ellison 0-6. Spirited effort champ! #RukengeNahi #EkIndiaTeamIndia #Cheer4India pic.twitter.com/m5DdlGJHAR
முன்னேறிய தீபிகா
இதன்மூலம், இந்தச் சுற்றோடு பிரவின் ஜாதவின் பதக்கப்பயணம் முடிவுக்கு வந்தது. பெண்கள் வில்வித்தையில், இந்தியாவின் தீபிகா குமாரி, இன்று நடைபெற்ற இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்று ’ரவுண்ட் ஆஃப் 8’ சுற்றுக்கு முன்னேறியது குறிப்பிடத்தக்கது.