ETV Bharat / sports

ஒலிம்பிக் நடுவரான தமிழ் திரைப்பட இயக்குநர்! - tamil film director becomes olympic karate judge

தற்போது நடைபெற்று வரும் ஒலிம்பிக் கராத்தே போட்டியில் நடுவராக 'கைலா' படத்தின் இயக்குநர் பாஸ்கர் ஸ்ரீனுவாசன் தேர்வாகியுள்ளார்.

ஒலிம்பிக் நடுவரான தமிழ்பட இயக்குநர் பாஸ்கர் ஸ்ரீனுவாசன்
ஒலிம்பிக் நடுவரான தமிழ் திரைப்பட இயக்குநர்
author img

By

Published : Aug 1, 2021, 7:04 PM IST

சென்னை: புதுச்சேரியில் பிறந்து தமிழ்நாட்டில் வளர்ந்த, பாஸ்கர் ஸ்ரீனுவாசன் என்பவர் உலக கராத்தே கூட்டமைப்பில் (WKF) இருபது ஆண்டுகளாக பணிபுரிந்து வருகிறார். இவர், தற்போது நடைபெற்றுவரும் டோக்கியோ ஒலிம்பிக்கிகல் கரோத்தே போட்டிகளுக்கான நடுவராக (REFREE) தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

தற்போது ஆசியாவின் ரெஃப்ரி கமிஷன் உறுப்பினராகவும், காமன்வெல்த் ரெஃப்ரி கமிஷன் உறுப்பினராகவும், அமீரகத்தில் இருக்கும் யுஏஇ கராத்தே கூட்டமைப்பில் ரெப்ரி கமிஷன் உறுப்பினாராகவும், தென் ஆசிய நாடுளின் ரெஃப்ரி கமிஷன் சேர்மனாகவும் பணியாற்றி வருகிறார். மேலும், இந்திய முன்னாள் ரெஃப்ரி கமிஷன் சேர்மனாகவும் அவர் செயல்பட்டுள்ளார்.

16 பேரில் தமிழர் ஒருவர்

உலக கரோத்தே கூட்டமைப்பில் உள்ள ஐந்து கண்டங்களின் தலைவர்கள், சேர்மன்கள் ஆகியோரால் ஆசிய கண்டத்திலிருந்து இந்த தேர்வுக்கு பாஸ்கர் பரிந்துரைக்கப்பட்டார்.

மார்ச், ஏப்ரல் மாதங்களில் துருக்கி, போர்ச்சுக்கல் நாட்டில் நடைபெற்ற நடுவர் தேர்வுகள் இரண்டிலும் 16 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டு, ஒலிம்பிக் நடுவர்களாக அங்கீகரிக்கப்பட்டனர். இதில், பாஸ்கர் ஸ்ரீனுவாசனும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. அதன்பின் ஒலிம்பிக்கில் நடுவராக செயல்படுவது குறித்தான பயிற்சி முன்னோட்டம் ஜூன் மாதம் ப்ரான்ஸில் நடைபெற்றது.

அதிலும், பாஸ்கர் தன்னை முன்னிறுத்திக் காட்டியுள்ளார். உலகத்தில் உள்ள இருநூறுக்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து பதினாறு பேர்கள் மட்டுமே தேர்வாகியுள்ள நிலையில், அதில் ஒருவராய் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் தேர்வாகி இருப்பது கவனிக்கத்தக்கது.

யுஏஇ மூலம் தேர்வு

இதில் குறிப்பிட வேண்டியது இந்தியக் கராத்தே சங்கம், இந்திய ஒலிம்பிக் கமிட்டியில் அங்கீகாரம் இல்லாமல் இருப்பதால், இந்தியாவில் இருந்து எதுவும் செயல்பட முடியாத சூழ்நிலையில் அவர் அரபு அமீரகத்தில் இருந்து ஒலிம்பிக் கமிட்டிக்கு பரிந்துரைக்கப்பட்டார். ஆசிய கராத்தே சம்மேளனத்தின் ஜென்ட்ரல் நாசர் என்பவர் மூலமாக ப்ரான்ஸ் செல்லும் வாய்ப்பைப் பெற்றார்!

பாஸ்கர் ஸ்ரீனுவாசன், 2019ஆம் ஆண்டு வெளியான 'கைலா' என்ற படத்தை தயாரித்து, இயக்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஒலிம்பிக் போட்டிகள் நிறைவுபெற்று தமிழ்நாடு வந்தவுடன் அடுத்த படத்திற்கான வேலைகளை தொடங்க இருப்பதாக தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: வென்றார் சிந்து; இந்தியாவுக்கு இரண்டாவது பதக்கம்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.